Categories: Cinema News latest news

இத அஜித் 20 வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சிட்டார்!.. களத்தில் இறங்கிய தல ரசிகர்கள்..

நடிகர் விஜய் சமீபத்தி்ல் தனது மக்கள் மன்றம் சார்பில் 2023ம் வருடம் நடைபெற்ற பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் சந்தித்தார். மேலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும், ஊக்கப்பரிசும் கொடுத்தார். இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடந்தது.

இதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். எல்லோருக்கும் அறுசுவை உணவும் பரிமாறப்பட்டது. மேடையில் பேசிய விஜய் ‘படிப்புதான் வாழ்க்கையில் முக்கியம்’ என தெரிவித்தார். மேலும், காமராஜர், பெரியார், அம்பேத்கார் ஆகியோரை பற்றி படியுங்கள் எனவும் கூறினார். அவர் அப்படி பேசியதை சத்தியராஜ் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். விஜய் எதிர்காலத்தில் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என பேசப்பட்டு வரும் நிலையில், இந்த நிகழ்ச்சி அதற்கு அடித்தளம் போல் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ரூ.2 கோடி வரை விஜய் தரப்பு செலவு செய்துள்ளது.

திரையுலகில் விஜய்க்கு போட்டியாக கருதப்படுபவர் நடிகர் அஜித். விஜய் படம் தொடர்பான அப்டேட் எதாவது வந்து டிரெண்டிங் ஆனால் உடனே அஜித் பட அப்டேட் அல்லது அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகும். அதேபோல் அஜித் அப்டேட் வந்தால் உடனே விஜய் நடிக்கும் படம் தொடர்பான செய்தி ஒன்று வெளியாகும். சினிமாவில் மட்டுமில்லை.

சமூகவலைத்தளங்களிலும் விஜய் – அஜித் போட்டி என்பது தொடர்ந்து வருகிறது. விஜய் – அஜித் ரசிகர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. இரண்டு நாட்களாக விஜய் செய்த விஷயம் பற்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.

எனவே, களத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள் இத அஜித் எப்பவோ செய்துவிட்டார்’ எனக்குறிப்பிட்டு 2004ம் வருடம் மாணவர்களை அவர் மாணவ மாணவிகளை சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடந்ததாகவும் 7 ஆயிரம் மாணவர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். மேலும், எல்லோரும் மரம் வளருங்கள் என்கிற அறிவுரையும் அவர் வழங்கினார் என அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா