Categories: Cinema News latest news

போட்றா வெடியா! ரிலீசான அஜித்- ஆதிக் படத்தின் டைட்டில்… என்னங்க இப்படி எல்லாம் இறங்கிட்டீங்க?

Ajithkumar: நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்தபடத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டைட்டிலை பார்த்த விஜய் ரசிகர்களே கொஞ்சம் ஷாக்கில் தான் இருக்கின்றனராம்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக ஏகே63 திரைப்படத்தினை தெலுங்கின் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: இதுதான் கேப்புல கெடா வெட்றதா?!. சிவாஜி படத்தில் தன்னை பற்றி பாடல்களை எழுதிய கண்ணதாசன்!..

விடாமுயற்சி ஷூட்டிங் கடந்த மாதமே முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜர்பைஜானின் கால நிலை மாற்றத்தால் அப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து கேன்சல் ஆனது. இதை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிச்சமாகி இருக்கிறது.

ஏற்கனவே வேட்டையன், இந்தியன்2 மற்றும் விடாமுயற்சி திரைப்படங்களை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதனால் வேட்டையன் முடிந்த பின்னரே விடாமுயற்சியின் இறுதிக்கட்ட பணிகள் நடக்க இருக்கிறது. இதனால் அப்படம் முடியவே இரண்டு மாதம் வரை ஆகும் எனவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டிலை இன்று அறிவிப்போம் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெரிவித்து இருந்தனர். இதனால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அந்த ஆசையை மண்ணை போடும் விதமாகவே டைட்டிலை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. அதாவது, அஜித் நடிப்பில் உருவாகும் 63வது படத்துக்கு குட் பேட் அக்லி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜயின் படத்துக்கு ஆங்கில பெயர் வைக்கப்பட்ட போது பலரும் அதிருப்தி தெரிவித்தனர். அந்தவகையில் தற்போது அந்த லிஸ்ட்டில் அஜித்தும் இணைந்து இருக்கிறார். பல வருடமாக சுத்த தமிழ் பெயரில் நடித்து வந்த அஜித் பெயரை ஆதிக் கெடுத்துவிட்டதாகவும் ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2025 பொங்கலுக்கு ரிலீஸாகும் எனவும் படக்குழு அறிவித்து இருக்கிறது.

இதையும் படிங்க: ஆசைப்பட்ட ஃபாரின் சரக்கு கிடைக்கலயே!.. கோபத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்..

Published by
Shamily