Ajith: 155 கோடி சம்பளம்.. தயாரிப்பாளரை லாக் செய்த அஜித்.. இயக்குனர் யார் தெரியுமா?
ஜென்டில்மேன் விருது வாங்கிய அஜித்துக்கு பலதரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ஆதிக் அஜித் இணையும் படத்தின் ப்ரீ புரடக்ஷன் பணிகள் முடிந்துவிட்டதாகவும் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாகவும் நேற்று ஒரு செய்தி வெளியானது.
ஆனால் இன்று அஜித்தை லோகேஷ் இயக்க இருக்கிறார் என்று புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு இந்த தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது அஜித் 120 கோடி கேட்கிறார் என்ற காரணத்தினாலேயே பல தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் எடுக்க தயங்கிக் கொண்டிருந்தனர். 80 கோடி சம்பளம் . ஓகேனா அஜித்தை வைத்து படம் எடுக்க தயார் என்று ஏஜிஎஸ் சொன்னதாகவும் சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது.
இப்படி சம்பள பிரச்சினையாலேயே அஜித்தின் படம் டேக் ஆஃப் ஆகாமலேயே இருந்தது. அதற்கு காரணம் விடாமுயற்சி தோல்வி , குட் பேட் அக்லி படம் ரசிகர்களுக்கான படமாக இருந்தது என்பதுதான். இந்த நிலையில் அஜித்துக்கு 155 கோடி சம்பளம் கொடுக்க ஒரு தயாரிப்பு நிறுவனம் முன்வந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் அஜித்தை வைத்து படத்தை எடுக்க இருக்கிறார்களாம்.
ஆனால் இது செவி வழி செய்தியாகத்தான் இருப்பதாக செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். ரெட் ஜெயண்ட் தான் இப்போது படத்தை தயாரிப்பது இல்லையே என்று இருக்கும் சூழ் நிலையில் ரெட் ஜெயண்ட் சார்பாக ராஜ்கமல் நிறுவனம் அஜித்தை வைத்து எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் என்றும் கூறி வருகிறார்கள். இது முழுக்க முழுக்க அரசியல் பின்னனி காரணம் தானாம்.

ஏனெனில் விஜய்க்கு எதிராக ஒரு பவர்ஃபுல் நபரை உருவாக்க வேண்டும். 155 கோடி கொடுக்க யாரும் தயாராக இல்லை. அதனால் விஜய்க்கு எதிராக தங்களுக்கு ஆதரவாக அஜித் இருக்க வேண்டும் என்பதற்காக ரெட் ஜெயண்ட் இப்படியொரு ஐடியாவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இணைய ஒரு பொறுப்பு தருவதாக அஜித்திடம் ஜெயலலிதா கூறினார். ஆனால் அரசியல் தனக்கு செட்டாகாது என அஜித் அதை மறுத்துவிட்டார்.
இப்போது விஜய்க்கு எதிராக அஜித்தை கொம்பு சீவ திமுக சார்பில் ஒரு சூழ்ச்சி நடப்பதாக தெரிகிறது. இருந்தாலும் சம்பளம் விஷயம், பெரிய பட்ஜெட் படம் அஜித் என்ன நினைக்கிறார் என்பது தெரியவில்லை.
