Ajith: யாரா இருந்தாலும் இவ்வளவுதான்.. அஜித் சம்பளத்தில் ஆட்டம் காட்டும் ஏஜிஎஸ்
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தும் ஆதிக்கும் இணையப் போகிறார்கள். அதுதான் அஜித்தின் 64-வது படமாகவும் இருக்க போகிறது. இதற்கிடையில் அஜித் கார் ரேஸில் மிகவும் பிஸியாக இருந்ததனால் சினிமாவிற்கு கொஞ்சம் பிரேக் கொடுத்தார். இப்பொழுது தன்னுடைய முதல் கார் ரேஸ் சீசனை முடித்த அஜித் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அவருடைய 64 ஆவது படம் பற்றிய அப்டேட்டை ரசிகர்கள் கேட்ட வண்ணம் இருக்கின்றனர்.
ஆனால் சம்பளம் தொடர்பான பிரச்சனையில் அந்த படம் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லாமல் இருக்கின்றது. ஆரம்பத்தில் இந்த படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில முரண்பாடுகள் காரணமாக இந்த படத்தில் இருந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் விலகினார்கள். அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணைந்து செயல்படும் இரண்டாவது படமாக இந்த படம் இருக்கும்.
இது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருந்தார். இந்த படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் இந்த படத்திற்காக அஜித்தின் சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. மற்ற தயாரிப்பு நிறுவனங்களை விட ஏஜிஎஸ் நிறுவனம் நடிகர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் கொஞ்சம் காரர் காட்டி வருகிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும்.

முதலில் பட்ஜெட்டை போட்டு எல்லாம் சரியாக வருகிறதா என்று பார்த்த பிறகு தான் நடிகர்களுக்கான சம்பளத்தையே ஏஜிஎஸ் நிறுவனம் அறிவிப்பார்கள். ஏற்கனவே அஜித்திற்காக சிறுத்தை சிவா மற்றும் ஒரு சில இயக்குனர்கள் சென்று இருக்கிறார்கள் .ஆனால் அது செட்டாகவில்லை. தற்போது இந்த படத்திற்கும் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் சென்றதாக தெரிகிறது. வழக்கம் போல ஏஜிஎஸ் நிறுவனம் கணக்கு போட்டு பார்க்க அஜித்தின் சம்பளம் 70லிருந்து 80 கோடி வரை தான் கொடுக்கப்படும் என கூறினார்களாம்.
ஆனால் அஜித்தின் எதிர்பார்ப்போ 185 கோடி. அஜித்தின் கால்ஷீட் கிடைக்காதா என பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் யாராக இருந்தாலும் எங்களுடைய ரூல்ஸை மாற்ற மாட்டோம் என்பதில் ஏஜிஎஸ் நிறுவனம் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
