கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று ஓரளவு தயாரிப்பாளருக்கும், தியேட்டர்காரர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம். புதிய படங்கள் வருகையை தாண்டியும் வலிமை திரைப்படம் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் வசூல் 100 கோடி 200 கோடி என்று ரசிகர்கள் கூறி வந்தாலும், சில திரை விமர்சகர்கள் அதெல்லாம் ஒன்றும் கிடையாது உண்மையான வசூல் நிலவரம் இதுதான் என்று தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறி வருகின்றனர்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அஜித் திரையுலகுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவர் தனது கருத்துக்களை அவருடைய பிஆர்ஓ மூலம் வெளியிட்டிருந்தார். அதில், சினிமாவில் ரசிகர்கள், நடுநிலை விமர்சகர்கள், எதிர்ப்பாளர்கள் இந்த மூன்றும் மூன்று பக்கங்களாக இருக்கும். இந்த மூன்றையும் ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும். வாழு வாழ விடு.’ என கூறியிருப்பார்.
இதையும் படியுங்களேன் – சார் நீங்க எங்ககேயோ போய்ட்டீங்க.! ராஜமௌலி குடும்பத்தையே நெகிழ வைத்த நம்ம சமுத்திரக்கனி.!
அதனை குறிப்பிட்டு தற்போது இணையவாசிகள் வலிமை படத்தின் ரிசல்ட்டை அன்றே கணித்துவிட்டார் அஜித். என்று இணையத்தில் அதனை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மையில் வலிமை படத்தின் ரிசல்ட்டை வைத்து அவர் அவ்வாறு கூறவில்லை. ஆனால், வழக்கமாக பதிவிடும் வாழு வாழ விடு எனும் கருத்து தற்போதைய நெகட்டிவ் விமர்சனங்களை பொருட்படுத்தாமல், அடுத்தடுத்த வேலைகளை பார்க்கவேண்டும் என கூறியது போல் உள்ளது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…