Ajith: அஜித் போன்றவர்கள்தான் அரசியலுக்கு வரணும்! திடீர் புரளியை கிளப்பும் பிரபலம்
அஜித் போன்றவர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும். ஏனெனில் அவர் சொல்கிற அனைத்துமே எந்த விதத்திலும் எதிர்பார்ப்பு இல்லாத வகையில் தான் இருக்கின்றன. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் தற்குறி என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தாமல் சொல்லி இருக்கிறார். எல்லாத்துக்கும் காரணம் மக்கள்தான் என்று சொல்லி இருக்கிறார். ஒரு படம் வருகிறது என்றால் அஜித் அதிர்ச்சியுடன் சொல்கிறார், எப்படி எனில் டிஜிட்டலில் ஒரு ஸ்கிரீன் வைத்திருக்கிறார்கள். அங்கு உட்கார்ந்து கொண்டு பாடலை மறுபடியும் போடு.
சண்டை காட்சியை மறுபடியும் போடு. இல்லாவிட்டால் திரையை கிழித்து விடுவோம் என்று சொல்வது எவ்வளவு பெரிய அசிங்கம் .இப்படிப்பட்ட ரசிகர்கள் கூட்டத்தை அவர் விரும்பவில்லை. அவருடைய ரசிகர்கள் செய்தாலும் அதை அஜித் விரும்பவில்லை. அவருடைய ரசிகர்கள் அந்த மாதிரி செய்தது கிடையாது. ஆனால் விஜய் ரசிகர்கள் இதை செய்திருக்கிறார்கள். பட்டாசு கொளுத்துகிறேன்., தியேட்டரை தீ வைத்துக் கொளுத்துகிறேன் என அத்தனை அட்டூழியங்களும் விஜய் ரசிகர்கள் செய்திருக்கிறார்கள். இந்த மாதிரியான கேடுகெட்ட விஷயங்களைப் பற்றி அந்த பேட்டியில் அஜித் பேசியிருக்கிறார்.
இந்த மாதிரியான ஒரு சமூகமோ, ஒரு ரசிகர்களோ தேவையா? அவர்களுக்கு எண்ணெயை ஊற்றுகிறார்கள் என மீடியாக்களையே அஜித் விமர்சனம் செய்திருக்கிறார். இந்த மாதிரி போக்கு மாற வேண்டும் என்று அவர் கூறுகிறார் .இன்னொரு விஷயம் விஜயை கிழி கிழி என கிழித்திருக்கிறார். யாரையும் இன்னொருத்தருடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது என சொல்லிவிட்டு 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் ஒரு கூட்டத்தை கூட்டுவது என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. உன்னுடைய அறிவை காட்டுவதற்கு இந்த கூட்டத்தின் மூலமாகத்தான் உன் அறிவை காட்ட வேண்டுமா அப்படி என்றும் சொல்கிறார்.
இது விஜயை நேரடியாக சொல்லவில்லை என்றாலும் யாரை சொல்கிறார் என அனைவருக்குமே தெரிந்துவிட்டது. இது எல்லாருடைய கூட்டுப் பொறுப்பு என்கிறார். அனைவரும் உரிமை உரிமை எனக் கேட்க்கிறீர்கள். அதற்கு முன்பு உங்களுடைய கடமையை செய்தீர்களா என்றும் அஜித் கேட்டிருக்கிறார். இது அரசியலில் மிகவும் உற்று நோக்க வேண்டிய பாயிண்ட். அவர் கொடுத்த பேட்டியில் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. அது என்னவெனில் தமிழக அரசியலில் காலூன்ற வேண்டியது தமிழக அரசியலுக்கு வர வேண்டியது விஜய் இல்ல. அஜித் தான்.
அறிவு சார்ந்த பார்வையாளர்கள் விஷயம் தெரிந்தவர்கள் அனைவருமே அஜித்தின் அந்த பேட்டியை மிகவும் மதிப்பு மிக்கதாக பார்க்கிறார்கள். ஏனெனில் அவருடைய அந்த பேட்டி அவருடைய மேனரிசம் அவரை ஒரு ஞானியாகவே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் .ரொம்ப நாளைக்கு பிறகு அஜித்தின் பேட்டியை நாம் கேட்கிற மாதிரியாக இருந்தது. தவக ரசிகர்கள் எப்படி உணர்ச்சிவசப்பட்டார்களோ அந்த அளவுக்கு அஜித் உணர்ச்சிவசப்பட்டதையும் நாம் பார்த்திருக்கிறோம். அது 20 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. அது ஒரு பெப்சி பிரச்சனை .பெப்சி பிரச்சனையில் தொழிலாளர்கள் சில பேர் தற்கொலை செய்து இறந்த பொழுது உணர்ச்சிவசப்பட்டு பாடையை தூக்கிக் கொண்டு போனார் அஜித். உணர்ச்சிவசடு அழுது கொண்டே போனார். அப்படி உணர்ச்சிவசப்பட்ட அஜித்திடம் ஒரு பெரிய மாற்றம் வந்தது பெப்சி போராட்டத்திற்கு அப்புறம்தான் என இந்த தகவலை பத்திரிக்கையாளர் உமா பேதி பேசியுள்ளார்.
