Connect with us
valimai

Cinema News

எனக்கு அதற்கு உரிமை இல்லை.! என்னா வார்த்தை.!? இதுதான் எங்க தல அஜித்.!

அஜித் குமார் உடன் நடிக்கும் அத்தனை நடிகர்களும் அவரை பற்றி புகழ்ந்து பேசாமல் இருக்க மாட்டார். ஒரு பெரிய ஹீரோ படத்தில் நடித்தால் அவர் நல்லவர் , நல்ல திறமையான நடிகர்  என பலர் புகழ்வர். ஆனால் உண்மையில் மனதார பலர் அஜித்தை ரெம்ப நல்ல மனிதர் என கூறியுள்ளனர்.

valimai

அப்படி தான் வலிமை திரைப்படத்தில் அஜித் உடன் நடித்த ஹுமா குரோஷியும் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே அளித்த பேட்டிகளில் அஜித் மிகவும் நல்லவர். அவர் உடன் தொடர்ந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் – விண்ணை முட்டிய பீஸ்ட் பிசினஸ்.! அந்தரத்தில் தொங்கும் சூர்யா திரைப்படம்.!

இவர் அஜித்திடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார் , அதவது நீங்கள் ஏன் கோபப்படுவதில்லை. எதனால் என கேட்டுள்ளார். அதற்கு அஜித் , ‘  நான் காட்டும் கோபத்தை என்னிடம் திருப்பி காட்ட இயலாதவர்களிடம் எனக்கு கோபப்பட துளி கூட உரிமை இல்லை.’ என அசரடிக்கும் பதிலை கூறியுள்ளார். இதனை குறிப்பிட்டு ஹுமா, அஜித் மிகவும் நலலவர் என்பதற்கு இதுகூட ஒரு சான்று தான் என குறிப்பிட்டுள்ளார்.

அஜித் – ஹியூமா குரோஷி – கார்த்திகேயா நடிப்பில் வலிமை திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இதனை வரவேற்க ரசிகர்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top