Connect with us

Cinema News

இனிமேலும் பேச்சு வாங்க முடியாது!.. கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி.. கலைஞர் 100 விழா.. அஜித் அதிரடி?

விடாமுயற்சி படத்துக்காக அஜர் பைஜானில் நடிகர் அஜித் கடந்த சில மாதங்களாக சூட்டிங் செய்து வரும் நிலையில், துபாயில் உள்ள அவரது புதிய வீட்டில் குடும்பத்துடன் புத்தாண்டு மற்றும் மகள் அனோஷ்காவின் 16 வது பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்டவற்றை கொண்டாடி வந்தார்.

கேப்டன் விஜயகாந்த் திடீரென உடல் நல குறைவு காரணமாக புத்தாண்டுக்கு முன்னதாக உயிரிழந்த நிலையில் தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது. ஆனால், அஜித், விஷால், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் வெளிநாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த நிலையில், மீண்டும் சென்னை திரும்பி வரும் அவர்கள் விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வடிவேலுவை திட்டுற உரிமை அந்த ஒரு நடிகருக்குத்தான் உண்டு! வேற எவனுக்கும் இல்ல – பகீர் கிளப்பிய காமெடி நடிகர்

நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, அருண் விஜய், சிவக்குமார் உள்ளிட்டோர் சமீபத்தில் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.

நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பி உள்ள நிலையில், இன்று தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், கலைஞர் 100 விழா இன்று மாலை நாலு மணிக்கு கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது நிலையில், அந்த நிகழ்ச்சியிலும் நடிகர் அஜித் பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: லோகேஷ் மேல அப்படி கேஸ் போட்டதே காமெடியா இருக்கு!.. மாநகரம் பட நடிகர் என்ன சொன்னார் தெரியுமா?..

துபாயில் நடிகர் அஜித் நடனமாடிய வீடியோ காட்சிகள், ரசிகர்களின் செல்போனை பிடுங்கி வீடியோக்களை டெலிட் செய்த காட்சிகளும் வைரலான நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு இரண்டு வரி ட்வீட் கூட போட முடியவில்லை துபாயில் இப்படி குத்தாட்டம் போடுவதா என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக இப்படி ஒரு அதிரடி ரூட்டுக்கு அஜித் மாறவுள்ளார் என்கின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பது அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினால் மட்டுமே தெரிய வரும் என்கின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top