×

இந்தத் தடவை டாப் ஸ்பாட் நிச்சயம்... தீவிரமாகப் பயிற்சியெடுக்கும் அஜித்!

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நடிகர் அஜித் தீவிரமாகப் பயிற்சியெடுத்து வருகிறாராம். 
 
 

வலிமை படத்தின் ஸ்டண்ட் காட்சி மட்டுமே மிச்சமிருக்கும் நிலையில், ஸ்பெயினில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படுவதற்காகப் படக்குழுவினர் காத்திருக்கிறார்கள். `வலிமை அப்டேட்’ விவகாரத்தில் அஜித் அதிருப்தியடைந்து ரசிகர்களைப் பொறுமை காக்கும்படி அறிக்கை வெளியிட வேண்டிய சூழல் வந்தது. 


சமீபத்தில் சென்னை ரைபிள் கிளப்புக்குச் செல்வதாக அட்ரஸ் மாறி சென்னை கமிஷனர் ஆபிஸுக்கு அஜித் சென்ற சம்பவம் நடந்தது. அங்கு அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வைரலாகின. இந்தநிலையில், அஜித் எதற்காக ரைபிள் கிளப்புக்குச் சென்றார் என்ற பின்னணி இப்போது வெளியாகியிருக்கிறது. 


தேசிய அளவிலான ரைபிள் போட்டி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்னை ரைபிள் கிளப்பில் அஜித் தீவிரமாகப் பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறாராம். கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு இரண்டு பிரிவுகளில் 9 மற்றும் 12வது இடங்களை அவர் பிடித்ததாகத் தெரிகிறது. அதனால், இந்த முறை எப்படியும் டாப் ஸ்பாட்டைப் பிடித்தே தீருவது என்ற எண்ணத்தில் தீவிரமாக சுடுவதற்கான பயிற்சியில் இலக்கைக் குறிபார்த்துக் கொண்டிருக்கிறாராம் அஜித். 

From around the web

Trending Videos

Tamilnadu News