ajith
அல்டி மேட் ஸ்டார் அஜீத் குமார் ரசிகர்கள் மத்தியில் நெருக்கம் இல்லாதவர். போய் புள்ளக்குட்டிங்களை எல்லாம் ஒழுங்கா படிக்க வைங்கடா என்ற பார்முலாவைப் பின்பற்றுபவர். இவர் தனது ரசிகர் மன்றத்தையே ஒரு கட்டத்தில் அவங்க நல்லாருக்கணும் என்பதற்;காக கலைத்துள்ளார். ஆனாலும் ரசிகர்களின் எண்ணிக்கை அவருடைய பெரிய மனசுக்காக அதிகரிக்கத் தான் செய்தன. அந்த வகையில் பிஆர்ஓ வி.கே.சுந்தர் அஜீத்பற்றி ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
Also read: கோட் படத்துல ஒரு சிக்கல்… ஆனா அது தான் பிளஸ்..! இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்
ரசிகர்களை விட பணம் முக்கியம் இல்ல. ஜி படம் வந்த நேரத்துல அஜித் கொஞ்சம் நிதி நெருக்கடில இருந்தாரு. அப்போ என் மூலமா அவருக்கு பெப்ஸி விளம்பரத்துல நடிப்பதற்காக 1 கோடி சம்பளமும் தர்ரேன்னு பேசுனாங்க. ஆனா அஜித் சார் வேணாம்னு சொல்லிட்டார். ஏன்னு கேட்டதுக்கு நான் பெப்ஸி குடிச்சதெ இல்ல. அப்படி இருக்கும்போது நான் இதுல நடிச்சா என் ரசிகர்கள் குடிப்பாங்க. என் ரசிகர்களை விட எனக்கு இந்த பணம் முக்கியமல்லன்னு சொல்லிட்டாரு என்று தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
அஜீத்துக்கு ரசிகர்கள் மேல் எவ்வளவு அன்பு இருந்தா இப்படி சொல்லிருப்பாருன்னு நினைச்சிப் பாருங்க. ரசிகர் மன்றங்களைக் கலைத்தாலும் கூட அவர்கள் மேல் தனிப்பாசம் இருப்பது பாராட்டுதலுக்குரியது தான்.
ரசிகர்கள் தான் எப்போதும் ஹீரோவைத் தேடிப் புகைப்படம் எடுப்பார்கள். ஆனால் அஜீத் அதுல வேற லெவல். ரசிகர்களைத் தேடிச் சென்று புகைப்படம் எடுப்பாராம். இவர் வரிசையில் நின்று வாக்களிப்பார். சத்தமின்றி பலருக்கும் பல உதவிகளைச் செய்துள்ளார். தனது 40வது பிறந்த நாளுக்கு முன் தான் அஜீத் தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்துள்ளார்.
எதற்காக அவர் அப்படி கலைக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கலாம். வழக்கமாக அஜித் பிறந்தநாளான மே 1 ம் தேதி ரசிகர்கள் அவரைப் பார்க்க அவரது வீட்டுக்குப் படையெடுக்க ஆரம்பித்து விடுவர். ஆனால் 2011ம் ஆண்டில் பிறந்தநாளுக்கு இரு தினங்களுக்கு முன்பே ரசிகர்கள் காத்துக் கிடந்தார்களாம்.
Also read: வாண்டட் ஆக வலையில் சிக்கிய வெங்கட் பிரபு… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
காலை 4 மணி முதலே பட்டினியாகவும் கிடந்துள்ளார்கள். பலர் தனது சொந்த விஷயங்களுக்காக ரசிகர் மன்றத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தார்களாம். அது அஜீத்துக்கு அது வருத்தத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ரசிகர் மன்றத்தைக் கலைத்துள்ளார். குடும்பம் தான் முக்கியம். அதை முதலில் கவனிங்க என்றும் தெரிவித்துள்ளார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…