
Cinema News
வலிமை படத்தில் அஜித்துக்கு இவ்வளவுதான் சம்பளமா?….
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் தான் வலிமை. இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக அஜித் நடித்துள்ளார். பைக்கை வேகமாக ஓட்டும் கும்பலை வைத்துக்கொண்டு வில்லன் செய்யும் குற்றங்களை அஜித் எப்படி ஒடுக்குகிறார். அதன் மூலம் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதே வலிமை படத்தின் கதையாகும். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ ஏற்கனவே வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்க கூடிய ஒரு பாடமாக தல அஜித்தின் வலிமை திரைப்படம் தான் உள்ளது. அதன்படி, வலிமை திரைப்படம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்திற்காக அஜித் ரூ.55 கோடி சம்பளம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அஜித்துக்கு போட்டியாக இருக்கும் விஜய் ரூ.100 கோடி வரை சம்பளம் பெறும் நிலையில், அதில், அதில் பாதியை மட்டுமே சம்பளமாக பெறுவது குறிப்பிடத்தக்கது.