×

ஷாலினியை திட்டிய அஜித்.... ரகசியத்தை சொன்ன நண்பர் பப்லு

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக விளங்கி வருபவர் அஜித் - ஷாலினி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இன்று கூட பல காதல் ஜோடிகளுக்கு இவர்கள் மிகச்சிறந்த உதாரணமாக இருந்து வருகின்றனர்.

 

ஷாலினி மீது அஜித் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறார் என்பது பல பொது இடங்களில் நாம் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட அஜித் ஷாலினியை திட்டியதாக அவரது நண்பரும் நடிகருமான பப்லு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, இரண்டு முறைக்கு மேல் ஹோட்டல் ஒன்றில் பப்லு ஷாலினியை பார்த்து தயங்கி பேசாமல் வந்துள்ளார்.

பின்னர் அந்த ஹோட்டல் மூலம் பப்லுவை தொடர்பு கொண்டு பேசிய ஷாலினி, "மன்னிக்கவும், உங்களை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று தான் நானும் பேசவில்லை. அஜித்திடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். அவர் ரொம்ப கோபித்துக் கொண்டார். பப்லு என்னுடைய நண்பர், சீனியர் நடிகர். பள்ளியிலிருந்து எனக்கு சீனியர். நீ ஏன் அவருடன் பேசாமல் வந்தாய் என அஜித் ஷாலினியை திட்டியதாக கூறி அஜித் நல்ல குணத்தை பற்றி தெரிவித்தார் பப்லு.

From around the web

Trending Videos

Tamilnadu News