×

இன்னும் கொஞ்ச காலம்தான் நடிப்பேன் – சக நடிகரை அதிர வைத்த அஜித் !

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அஜித் தான் இன்னும் கொஞ்ச காலமே சினிமாவில் நடிப்பேன் என நடிகர் லொள்ளு சபா நடிகர் சாமிநாதனிடம் கூறியதாக அவர் சொல்லியுள்ளார்.

 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அஜித் தான் இன்னும் கொஞ்ச காலமே சினிமாவில் நடிப்பேன் என நடிகர் லொள்ளு சபா நடிகர் சாமிநாதனிடம் கூறியதாக அவர் சொல்லியுள்ளார்.

நடிகர் சாமிநாதன் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் லொள்ளு சபாவில் நடித்ததை அடுத்து லொள்ளு சபா சாமிநாதன் என அழைக்கப்பட்டு வருகிறார். தமிழ சினிமாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்கள் மற்றும் காமெடி நடிகர்களோடும் நடித்துள்ள அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் அஜித்தின் நடிப்பு வாழக்கைப் பற்றி ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவரது நேர்காணலில் ‘விவேகம் படத்தின் போது நான் அஜித்துடன் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் மேல் தோல் போட்டுக் கொண்டு அஜித் நட்பாக பழகினார். அப்போது நீங்கள் எத்தனைப் படங்களில் நடித்திருப்பீர்கள்? எத்தனை ஹீரோக்களோடு நடித்திருக்கிறீர்கள் என என்னைப் பற்றி விசாரித்தார். பின்னர் நான் இன்னும் சில படங்களில் மட்டுமே நடிக்க இருக்கிறேன். நான் வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்வதற்கு முன்னால் நானாகவே வெளியேறிவிட வேண்டும் என நினைக்கிறேன்’ என்க் கூறியதாக பகிர்ந்துகொண்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News