Categories: Cinema News latest news

என்னை யாருமே நம்பலை… மங்காத்தாக்கு முன்னரே அஜித் செய்த பெரிய உதவி.. சர்ப்ரைஸ் சொன்ன வெங்கட் பிரபு

VenkatPrabhu: தமிழ் சினிமாவின் பிரபல குடும்பத்தில் இருந்து வந்தாலும் தல அஜித் குமாரால் தான் தற்போது கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடித்திருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.

பிரபல இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவரின் தம்பியும் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளரான கங்கை அமரன் குடும்பம் கோலிவுட்டிலேயே பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமை வாய்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர் தான் வெங்கட் பிரபு.

இதையும் படிங்க: என்னையே கேட்ட பிரபல இயக்குனர் அந்த நடிகையுடன் படுக்கையில் ஓவர் டோஸில் இறந்தார்… நடிகை ஷாக்

முதலில் பாடத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து  முதலில் நடிகராக அறிமுகமானார். ஆனால் அப்படங்கள் வெங்கட் பிரபுவிற்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து சென்னை 28 படத்தை புதுமுக நடிகர்களை வைத்து இயக்கி முடித்தார். அப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இருந்தும், அவருக்கு மிகப்பெரிய நடிகர்களிடமிருந்து வாய்ப்பு வரவில்லை. தொடர்ந்து தன்னுடைய நெருங்கிய நடிகர்களை வைத்தே கோவா மற்றும் சரோஜா படங்களை ஹிட் ஆக கொடுத்தார். இருந்தும் அவரை நம்பி எந்த நடிகர்களும் முன்வரவில்லை. முதன்முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒப்புக்கொண்டு நடிக்க வந்தவர் அஜித் தான்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் வெங்கட்பிரபு கூறுகையில், நான் முதலில் மூன்று ஹிட் படங்களை கொடுத்தாலும் யாரும் என்னை நம்பவில்லை. சின்ன நடிகர்களை வைத்து இயக்கிவிட்டேன் பெரிய நடிகர்களை இவரால் எப்படி கையாள முடியும் என பயந்தனர். ஆனால் நான் சென்னை 28 முடித்த கையோடு எனக்கு முதல் முறையாக கால் செய்தது அஜித் சார் தான்.

இதையும் படிங்க:நடிகர்களில் தி பெஸ்ட் அஜித்தான்! யார்கிட்டயும் இல்லாத ஒரு குணம்.. பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்

எனக்கும், அவருக்கும் ஜி படத்தில் இருந்தே நட்பு இருந்தது. அவர் சென்னை28 வெளியாவதற்கு முன்னரே எனக்கு இன்னொரு நம்பரில் இருந்து கால் செய்தார். எனக்கும் ஒரு படம் வாய்ப்பு தாருங்கள் என கலாய்த்தார். அப்புறம் தான் அஜித் சார் என தெரிந்தது. சென்னை 28 பார்த்துவிட்டு என்னை இரண்டு தயாரிப்பாளர்களிடம் அனுப்பினார்.

ஆனால் அவர்களுக்கு என்மேல் நம்பிக்கை இல்லை. சென்னை 28 முடிந்த பின்னர் அஜித் சாருடன் தான் நான் பணியாற்றில் இருக்க வேண்டும். அவர் அதற்காக பெரிதும் முயற்சி எடுத்தார் ஆனால் அது நடக்கவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily