Categories: Cinema News latest news

அஜித் போட்ட கண்டிஷன்..! ஒத்துக்கொள்வாரா விக்னேஷ் சிவன்.!?

அஜித் நடிப்பில் தற்போது அவரது 61வது திரைப்படம் தயாராக உள்ளது. நேர்கொண்ட பார்வை , வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத் அஜித்தை இயக்க தயாராகிவிட்டார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார்.

ஒரு படத்தை முடித்துவிட்டு, அது ரிலீஸ் சமயத்தில் தான் அடுத்த பட கதை கேட்டு நடிக்க தயாராகும் அஜித் இந்த முறை தனது பாதையை மாற்றி அடுத்தடுத்த அப்டேட் உடனுக்குடன் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.

அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த வருடம் அக்டோபர் மாதம் பட ஷூட்டிங் ஆரம்பமாகி, அடுத்த வருட மத்தியில் படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – கே.ஜி.எஃப்-ஆல் பாதிவிலைக்கு பேரம் பேசட்பட்ட தளபதியின் பீஸ்ட்.! அதிர்ந்து போன சன் பிக்ச்சர்ஸ்.!

இப்படத்திற்கு அஜித் சில கண்டிசன்களை போட்டுள்ளாராம். அது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு. முதல் கண்டிஷன் , இந்த படத்தில் எந்த சீனிலும் அரசியல் இருக்கவே கூடாது.இரண்டாவது கண்டிப்பாக குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் இருக்க வேண்டும் என்பது தான். இந்த இரண்டு கண்டிஷன்களை அஜித் போட்டுள்ளாராம்.

இன்னும் ஷூட்டிங் தொடங்க பல மாதங்கள் இருக்கிறது. அதற்குள் அஜித்திடம் முழுகதையை கூறி திருத்தங்கள் செய்து மாற்றங்கள் கொண்டு வருவதே விக்னேஷ் சிவனின் வேலையாக இருக்கும் என கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan