Categories: Cinema News latest news

பைக் ரைடை விரும்புகிறவர்களா நீங்கள்? அஜித்திடம் இருந்து வந்த திடீர் அறிவிப்பு

தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். இவர் சமீப காலமாக பைக் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார். அவர் கடைசியாக நடித்த துணிவு பட வெற்றிக்கு பிறகு அடுத்த படத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அந்தப் படத்தில் சில தொய்வுகள் ஏற்பட்டுள்ளதால் தனது பைக் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

ajith1

இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மேலாளர் உதவியின் மூலம் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், தான் நீண்ட காலமாக இந்த மேற்கோளை தான் மேற்கொண்டு வருகிறேன் எனக் குறிப்பிட்டு ஒரு அழகான வாழ்க்கைக்கு உரிய தத்துவத்தை மேற்கோள் காட்டி குறிப்பிட்டு இருக்கிறார்.

“வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள், மற்றும் திறந்த பாதைகளை கொண்டாடுங்கள்” இதுதான் அந்த வாழ்க்கைக்கு உரிய மேற்கோள். மேலும் அவர் மேற்கொண்ட பைக் ரைடுகள் மற்றும் அவருடைய ஆர்வம் இது குறித்து அதை ஒரு தொழில் முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் “ஏகே மோட்டோ ரைடு” என்ற ஒரு சுற்றுலா நிறுவனத்தை அஜித் கொண்டு வந்திருக்கிறாராம்.

ajith2

அந்த நிறுவனத்தின் மூலம் சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் விரும்பிகளுக்கு அந்த நிறுவனம் மூலம் சுற்றுப் பயணங்களை வழங்குவதாகவும் அந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சிற்ற பயணங்கள் முழுவதிலும் இருக்கும் நம்பகத்தன்மை மற்றும் செயல் திறனை உறுதி செய்து அதற்கு ஏற்ப சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை இந்த நிறுவனம் மூலம் வழங்கும் என்றும் அஜித் தெரிவித்திருக்கிறார்.

Published by
Rohini

Recent Posts