ரேஸில் இருந்து விலகினார் அஜித்.. அணி எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
துபாயில் நடக்கும் கார் ரேஸில் இருந்து அஜித் விலகுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்த முடித்துள்ளார். இந்த நிலையில் துபாயில் நடக்கும் 24 மணி நேர கார் ரேஸ் பந்தயத்தில் அஜித்தின் அணி இடம் பெற்றுள்ளது.
நான்கு உறுப்பினர்களைக் கொண்ட அவருடைய அணி இந்தியா சார்பாக அந்த போட்டியில் கலந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென அந்த ரேஸில் அஜித் கார் ஓட்டப் போவதில்லை என்ற ஒரு முடிவை அவருடைய அணி நிர்வாகம் எடுத்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அணியின் வெற்றி வாய்ப்பு அஜித்தின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்து இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
ஆனால் அணியின் உரிமையாளராக அந்த துபாய் கார் ரேஸ் பந்தயத்தில் அஜித் தொடர்ந்து இருப்பார். அவருடைய அணி அந்தப் போட்டியில் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அஜித் ட்ராக்கில் கார் ஓட்டுவதை பார்க்க ரசிகர்கள் ஆங்காங்கே இருந்து வந்து அவருக்கு சப்போர்ட் செய்த வண்ணம் இருந்தனர். இப்போது அவர் கார் ஓட்ட மாட்டார் என்று தெரிந்ததும் அவருடைய அணிக்கு எங்களுடைய சப்போர்ட் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருந்தாலும் இந்த முடிவு ஒரு வித ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு கொடுத்தாலும் எப்படியாவது அஜித்தின் அணி வெற்றியடைய வேண்டும் என சோசியல் மீடியாவில் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள் ரசிகர்கள். அஜித்தின் நீண்ட நாள் கனவே ரேஸில் கலந்து கொண்டு போட்டி போடுவதுதான். ஆனாலும் அவருடைய அணிக்கு அவர் உறுதுணையாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.