Categories: Cinema News latest news

யாருக்காகவும் சிபாரிசு செய்யாத அஜித்!.. இவருக்கு மட்டும் ஏன்?.. விக்னேஷ்சிவன் சொன்ன சுவாரஸ்யதகவல்!..

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். மற்ற நடிகர்களோடு ஒப்பிடும் போது சற்று வித்தியாசமான நடிகரும் கூட. ரசிகர் மன்றத்தை கலைத்தவர், ரசிகர்களை ஒருபோதும் சந்திக்காதவர், பொது இடங்களில் வெளியே தலை காட்டாதவர் என ஒரு நடிகருக்கு இருக்கும் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருக்க கூடிய நடிகர் அஜித்.

ஆனால் இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் தமிழ் சினிமாவில் வேறு எவருக்கும் இல்லை. அந்த அளவுக்கு அஜித் மீது தீராத அன்பு வைத்திருக்கின்றனர் ரசிகர்கள். மறைமுகமாக ரசிகர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கியும் வருகிறார்.

இவரால் பயனடைந்தவர்கள் ஏராளம். ஆனால் செய்கின்ற உதவியை வெளியே தெரியாமல் செய்யக்கூடியவர். அந்த வகையில் நடிகர் ஜெய்சங்கரின் மூத்த மகனான விஜய் சங்கர் ஒரு பிரபலமான கண் மருத்துவர். அவரது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் அனைவருக்கும் அஜித் மூலமாகவே உதவிகள் செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையான தொகையை அஜித்தான் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அஜித்தை பற்றி விக்னேஷ் சிவன் பகிர்ந்த ஒரு தகவல் வைரலாகி வருகின்றது. அதாவது துணிவு படத்திற்கு பிறகு அஜித்திற்கும் விஜய் டிவி அமீருக்கும் ஒரு நல்ல நட்பு இருப்பதாக தெரிகிறது. துணிவு படத்தில் ஒரு பாடலுக்கு அமீர்தான் கோரியோகிராப் பண்ண வேண்டியதாம். ஆனால் அந்த வாய்ப்பு அமீருக்கு கிடைக்காமல் போய்விட்டதாம்.

மேலும் விக்னேஷ் சிவன் இயக்கப் போகும் ஒரு படத்திற்கு அமீருக்காக அஜித் சிபாரிசு செய்து விக்னேஷ் சிவனிடம் பேசினாராம். அமீர் மிகவும் திறமையான பையன் என்றும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடு என்றும் அஜித்தே போனில் விக்னேஷ் சிவனிடம் பேசியதாக ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்!. கலைஞருக்கும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் நடந்த சுவாரஸ்ய உரையாடல்!..

Published by
Rohini