கண்டுக்காத அப்பா.. தோள் கொடுத்த அஜித்! இனிமேலாவது ஜேசன் சஞ்சய்க்கு ஏறுமுகமா இருக்குமா?

by Rohini |
sanjay
X

கிட்டத்தட்ட ஒரு வருடமாக லைக்காவிடம் போராடிக் கொண்டிருக்கிறார் விஜயின் மகனும் வளரும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய். கனடாவில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை முடித்த கையோடு சென்னைக்கு வந்த சஞ்சய் நேரடியாக லைக்காவிடம் சரணடைந்தார். வந்த உடனேயே லைக்காவுடன் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி அதற்கான கையெழுத்தும் போடப்பட்டது .

இதில் விஜயின் தலையீடு எதுவும் இல்லை என்றும் அப்போது தகவல் வெளியானது .சினிமாவில் தன்னுடைய சொந்த முயற்சியில் வரவேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் தன் மகனுக்கு எந்த ஒரு சப்போர்ட்டும் செய்ய மாட்டார் என்ற ஒரு கருத்தும் பரவியது. அதற்கேற்ப சஞ்சய்க்காக இதுவரை விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு வாழ்த்து செய்தியும் எதுவுமே வரவில்லை .

இன்னொரு பக்கம் படித்து முடித்த கையோடு எப்படி பெரிய நிறுவனமான லைக்காவுடன் ஒப்பந்தமானார் என்ற ஒரு வகையில் சந்தேகம் எழ ஏற்கனவே லண்டனில் இருக்கும் சங்கீதாவின் அப்பாவுக்கும் லைக்காவுக்கும் ஏதோ ஒரு நட்பு இருப்பதனால் சங்கீதா சொன்னதின் பேரில் தான் லைக்காவுடன் இந்த ஒப்பந்தம் ஆகி இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. கையெழுத்து ஒப்பந்தமானதோடு சரி சஞ்சயின் படம் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவே இல்லை .

இதுவரை படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படவில்லை. ஆரம்பத்தில் இந்த படத்தில் துருவிக்ரம் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு இப்போது தான் சந்திப் கிஷன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது .இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் ஜேசன் சஞ்சயே லைக்கா மீது பெரிய எரிச்சலுக்கு ஆளானார் என்று சொல்லப்படுகிறது.

ஏனெனில் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. லைக்கா நிறுவனமும் அதைப்பற்றி எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை என்பதனால் பேசாமல் இந்த நிறுவனத்தில் இருந்து விலகிக் கொள்ளலாமா என்ற ஒரு முடிவில் சஞ்சய் இருந்ததாகவும் தன்னுடைய அட்வைஸரான சுரேஷ் சந்திராவிடம் இதைப் பற்றி பேசியதாகவும் சொல்லப்படுகிறது .சுரேஷ் சந்திரா உடன் சஞ்சய் போனில் பேசிக் கொண்டிருந்தபோது அருகில் அஜித் இருந்திருக்கிறார்.

உடனே அஜித் போனை வாங்கி சஞ்சயிடம் பேசி இருக்கிறார். சினிமாவில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் என்னிடம் கேளு. ஒருவேளை இந்த நிறுவனத்தில் இருந்து நீ விலகிக் கொள்கிறாய் என்றால் வேறொரு நிறுவனத்தை நான் சொல்கிறேன். அங்கு போய் பார் என்றெல்லாம் தன்னுடைய அறிவுரைகளை அஜித் சஞ்சய்க்கு வழங்கியதாகவும் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

இதை அறிந்த ரசிகர்கள் பெத்த பிள்ளைக்காக எதுவுமே கண்டு கொள்ளாமல் இருக்கும் விஜய் எங்கே ..தான் நல்லா இருந்தால் மட்டும் போதாது மற்றவர்களும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கும் அஜித் எங்கே என கூறி வருகிறார்கள்.

Next Story