Categories: Cinema News latest news

“இதை மக்கள் கிட்ட எடுத்துச் சொல்லுங்க”… ரங்கராஜ் பாண்டேவிடம் அஜித் முணுமுணுத்த செய்தி என்ன தெரியுமா??

ரசிகர்களிடையே ‘தல” என அறியப்படும் அஜித்குமார் தற்போது “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இதில் அஜித்துடன் மஞ்சு வாரியர், மகாநதி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Nerkonda Paarvai

துணிவு VS வாரிசு

அஜித் நடிப்பில் உருவாகி வரும் “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவருகிறது. அதே போல் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

Thunivu VS Varisu

கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் மோத உள்ளன. ஆதலால் ரசிகர்கள் இத்திரைப்படங்களுக்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

உதயநிதி ஸ்டாலின்

“துணிவு” திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார். “வாரிசு” திரைப்படத்தையும் உதயநிதி ஸ்டாலின்தான் வெளியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் “வாரிசு” திரைப்படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் லலித் குமார் வெளியிட உள்ளார்.

மூன்று பேர், மூன்றாவது கூட்டணி

அஜித்குமார்-ஹெச்.வினோத்-போனி கபூர் ஆகிய மூவரும் “நேர்கொண்ட பார்வை’, “வலிமை” ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு “துணிவு” திரைப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ஆதலால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

நேர்கொண்ட பார்வை

கடந்த 2019 ஆம் ஆண்டு அஜித்குமார், வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “நேர்கொண்ட பார்வை”. ஹிந்தியில் வெளிவந்த “பிங்க்” திரைப்படத்தின் ரீமேக்தான் இத்திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Nerkonda Paarvai

இத்திரைப்படத்தில் ரங்கராஜ் பாண்டே, அட்வகேட் சத்யமூர்த்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பொது விழாவில் “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் தன்னிடம் கூறிய ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டார்.

மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்

“நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த மூன்றாவது நாள், அஜித் சார் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘நீங்கள் இதுவரை சினிமாவை வெளியில் இருந்து பார்த்திருப்பீர்கள், இப்போது உள்ளே இருந்து பார்க்கிறீர்கள். இப்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?’ என என்னிடம் கேட்டார்.

Ajith Kumar

அதற்கு நான் ‘வெளியே இருந்து பார்க்கும்போது சினிமா ஒரு கொண்டாட்டமாக தெரிந்தது. ஆனால் உள்ளே இருந்து பார்க்கும்போது உதவி இயக்குனர்கள், உதவி கேமரா மேன்கள், டெக்னீசீயன்கள் ஆகிய பலரின் உழைப்பு தெரிகிறது’ என கூறினேன். அதனை கேட்டுக்கொண்ட அஜித் “நீங்கள் இப்போது கூறினீர்களே, இதனை தயவு செய்து மக்களிடம் எடுத்துக் கூறுங்கள்” என என்னிடம் சொன்னார்” என்று அந்த விழாவில் ரங்கராஜ் பாண்டே பகிர்ந்துகொண்டார்.

Arun Prasad
Published by
Arun Prasad