Categories: Cinema News latest news

செம மாஸாக வண்டி ஓட்டி செல்லும் அஜித்… முதல் முறை வெளியான வீடியோ..

நடிகர் அஜித்திற்கு நடிக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் பைக் ஓட்டுவது, பைக்கில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் தனியாக பயணிப்பது, கார் ரேஸில் கலந்து கொள்வது, துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குவது போன்ற பல விஷயங்களில் ஆர்வம் உண்டு. எனவே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை தவறாமல் செய்து வருபவர்.

வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து முடிந்த பின், அங்கு பல ஆயிரம் கிலோ மீட்டர் பைக் பயணம் செய்யும் குழுவை சந்தித்து அவர்களோடு இணைந்து பைக் டிரிப் செய்துவிட்டுதான் சென்னை திரும்பினார்.

அதோடு, 7 கண்டங்கள் மற்றும் 64 நாடுகளை பைக் மூலமாகவே சுற்றி வந்த பெண்ணான மாரல் யசர்லோவை டெல்லியில் அஜித் சந்தித்து பேசினார். எனவே, அஜித்தும் இது போல ஒரு நாள் பைக் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே பைக் பயணம் மேற்கண்ட அஜித் சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லை வரை சென்றார். அங்கு ராணுவ வீரர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாலைவனத்தில் பைக்கில் நிழலில் அவர் மணலில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி செம வைரலானது. அதன்பின், எங்கோ ஒரு காட்டில் ஒரு உயரமான இடத்தில் அவர் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் நேற்று காலை வெளியானது.

இந்நிலையில், எங்கோ ஒரு காட்டுப்பகுதியில் மணல் சாலையில் அவர் தனது பைக்கை ஓட்டி செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது வட இந்திய பகுதி எனக்கூறப்படுகிறது. இதைப்பார்க்கும் போது அஜித் இன்னும் பைக் பயணத்தில்தான் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவரது பைக் பயணம் தொடர்பான பல வீடியோக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா