×

இந்த வருஷம் நமக்கு தல தீபாவளி தான்... வலிமை படம் குறித்து சூப்பர் அப்டேட்

அஜித்தின் பிறந்தநாளுக்கு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 
 
d6e50929-dedf-4115-8195-2cf1435b6ccc

அஜித்தின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்பொழுது தான் வெளியாகும் என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஒரேயொரு பைக் ஸ்டண்ட் காட்சியை தான் படமாக்க வேண்டியிருக்கிறது. அந்த காட்சியை ஸ்பெயினில் இருக்கும் நிபுணர்கள் உதவியுடன் தான் படமாக்க முடியுமாம். கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருப்பதால் படக்குழுவால் ஸ்பெயினுக்கு செல்ல முடியாமல் இருக்கிறது. 

இதற்கிடையே டப்பிங் உள்ளிட்ட பிற வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. அஜித்தின் பிறந்தநாளுக்கு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் மக்கள் அவதிப்படும் இந்த நேரத்தில் அப்டேட் கொடுப்பது சரியல்ல என்று போனி கபூர் அறிவித்தார். இந்நிலையில் வலிமை அப்டேட் வேண்டும் என்று மீண்டும் கேட்கத் துவங்கிவிட்டார்கள் ரசிகர்கள். இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் அஸ்வினிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ வெளியானது.

தமிழகத்தில் தியேட்டர்கள் திறந்த பிறகே வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படுமாம். ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும்போதே ரிலீஸ் தேதியை அறிவிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. வலிமை படத்தை தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆக, இந்த தீபாவளி தல தீபாவளி தான். தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படமும் வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News