முன்பெல்லாம் ஒரு படம் ஹிட் என்றால் அது எத்தனை நாள் திரையரங்கில் ஓடியது என்பது மட்டுமே கணக்கு. வசூல் எல்லாம் அப்போது கணக்கில் இல்லவே இல்லை. ஆனால், தற்போது அது தலைகீழாக மாறிவிட்டது. ஒரு படம் எத்தனை நாள் ஓடுகிறது என்பதெல்லாம் கணக்கில் இல்லை.
ஒரு படம் எத்தனை கோடி வசூல் ஆகிறது. அதிலும் முன்னணி நடிகர்கள் என்றால் 100 கோடி கிளப் தான். அதில் எத்தனை நாளில் அந்த கிளபில் இணைகிறது என்பதை பொறுத்து இந்த கணக்கீடு வகுக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும், இந்த திரைப்படம் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை என்றே கூறவேண்டும்.
இதையும் படியுங்களேன் – அவர் வேணாம்.! ஆனால், அந்த கதை மட்டும் வேணுமாம்.! சந்தானத்தின் படுபாதக செயல்.!
இப்படம் முதல் நாளே உலகம் முழுக்க 70 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது என்று தகவல் வெளியானது. தமிழில் மட்டுமே 34 கோடி முதல் நாள் வசூல் என்று கூறப்பட்டது. அடுத்தது வெள்ளி, சனி என்பதால் அப்போதும் வசூல் நன்றாக செய்துள்ளது.
இப்படம் 3 நாளில் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளளது. தமிழகத்தில் மட்டும் முதல் நாள் 34, இரண்டாம் நாள் 20, மூன்றாம் நாள் 30 கோடி வசூல் என கணக்கு வெளியாகியுள்ளது. அதே போல மற்ற மொழிகள், வெளிநாடு வசூல் என்று பார்த்தால் இந்த படம் 120 கோடியை கூட கடந்திருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…
Vijay TVK:…