×

தள்ளிப்போகும் வலிமை... தலைக்கு தலதீபாவளி இல்லையா?

கொரோனா வைரஸ் பிரச்சனையால் வலிமை படத்தின் ரிலீஸை தீபாவளிக்கு தள்ளிப் போடும் ஐடியாவில் இருக்கிறதாம் படக்குழு. முன்னதாக ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர்.

 
thala-ajith-valimai

கொரோனா வைரஸ் பிரச்சனையால் வலிமை படத்தின் ரிலீஸை தீபாவளிக்கு தள்ளிப் போடும் ஐடியாவில் இருக்கிறதாம் படக்குழு. முன்னதாக ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்திருந்தனர்.

கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பதால் அஜித்தின் வலிமை படத்தின் ரிலீஸை தள்ளிப் போயுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் 90 சதவீத காட்சிகளை படமாக்கிவிட்டார்கள்.

அஜித் வரும் பைக் ஸ்டண்ட் காட்சி மட்டும் தான் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. அந்த காட்சியை ஸ்பெயினில் இருக்கும் நிபுணர்களின் உதவியுடன் படமாக்க வேண்டுமாம். கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தில் இருப்பதால் படக்குழுவால் ஸ்பெயினுக்கு செல்ல முடியவில்லை.

படத்தில் அந்த காட்சி மிகவும் முக்கியமானதாம். அதனால் அந்த காட்சி இல்லாமல் படப்பிடிப்பை நிறைவு செய்ய முடியாதாம். பைக் ஸ்டண்ட் காட்சியால் படத்தை திட்டமிட்டபடி வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடுகிறார்களாம். தீபாவளி பண்டிகைக்கு ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகவிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள அண்ணாத்தத படத்தின் ஷூட்டிங் அண்மையில் தான் முடிந்தது.

பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கிவிட்டனர். வலிமை படப்பிடிப்பும் கூட ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தது. ஆனால் அந்த ஸ்பெயின் ஷெட்யூலால் தான் படக்குழுவால் எதையும் செய்ய முடியவில்லை.

வெறும் 10 நாட்கள் ஷூட்டிங் தான் பாக்கி இருக்கிறது. ஆனால் தற்போது இருக்கும் நிலையில் ஸ்பெயினுக்கு கிளம்புவது சாத்தியமே இல்லை. இதனால் தீபாவளிக்கும் படம் வெளியாகாது என கூறப்படுகின்றது.

From around the web

Trending Videos

Tamilnadu News