சூர்யாவுக்கு சொம்புதூக்கியாக மாறிய தனஞ்செயன்! தக்க பதிலடி கொடுத்த சித்ரா லட்சுமணன்
சூர்யா:
சமீப காலமாக சோசியல் மீடியாவில் அதிக ட்ரோலுக்கு ஆளாகியவர் நடிகர் சூர்யா. அதுவும் கங்குவா திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து விட்டனர். கிட்டத்தட்ட சூர்யா ஒரு வெற்றி படம் கொடுத்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அதன் பிறகு அவருடைய நடிப்பில் சொல்லும்படியாக எந்த ஒரு படங்களும் நல்ல ஒரு வரவேற்பை பெறவில்லை.
இதில் கங்குவா திரைப்படத்திற்காக இரண்டு வருடங்கள் தன்னுடைய கடின உழைப்பை போட்டிருக்கிறார் சூர்யா. ஆனால் அந்த உழைப்பிற்கு கிடைத்த பலன் என்னவென்று அனைவருக்குமே தெரியும். இதில் சூர்யா என்ன தவறு செய்தார் என்பதுதான் அனைவரின் கேள்வியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த படம் தோல்வி அடைந்ததற்கு சூர்யாவை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த விமர்சனத்தால் சூர்யா இந்த சமூகத்திற்கு செய்து வரும் பல நல்ல செயல்கள் அப்படியே மறைக்கப்பட்டு விடுகின்றன. மாணவர்களின் நலனுக்காக அவர் என்னெல்லாம் செய்து வருகிறார் என்பதை ஒட்டுமொத்தமாக மறந்து விட்டனர் ரசிகர்கள். இந்த நிலையில் பெரும்பாலும் சூர்யாவுக்கு ஆதரவாகவே பேசி வருபவர் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.
கங்குவா:
கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் கூட அந்த படத்தை பற்றியும் சூர்யா அடுத்து தமிழ் சினிமாவிற்கு என்னெல்லாம் செய்யப் போகிறார் என்பதைப் பற்றியும் மிகப்பெருமையாக பேசிக் கொண்டிருந்தவர் தனஞ்செயன். கங்குவா படத்தின் தோல்வியின் எதிரொலி தனஞ்செயனையும் பெருமளவு பாதித்தது. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் மீட்டிங் என்ற வகையில் சமீபத்தில் சினிமாவில் இருக்கும் சில முக்கியமான தயாரிப்பாளர்கள் பல முன்னணி நடிகர்களை பற்றி அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இதில் தனஞ்செயன் கூறும்பொழுது 2003 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் இவர்கள்தான் டாப்பில் இருந்தார்கள்.நான்கு பேருமே சரிசமமான வெற்றி தோல்வி படங்களை கொடுத்து வந்தனர். ஆனால் இந்த நான்கு பேரில் விஜய் அஜித் மட்டும் இன்னும் ஒரு பெரிய இடத்திற்கு சென்று உச்சத்தை அடைந்தனர் என்ற வகையில் பேசி இருந்தார்.
இதை குறிக்கிட்டு பேசிய சித்ரா லட்சுமணன் அப்படியெல்லாம் இல்லை. விஜய் அஜித் இரண்டு பேருமே அப்போதிலிருந்து பெரிய லீக்கில் இருந்தவர்கள் தான். அவர்களுக்கு அடுத்து நான்கு மடங்கு பின்னணியில் தான் சூர்யா விக்ரம் இருந்தார்கள். ஆனால் வெற்றி படங்களை சமமாக நான்கு பேருமே கொடுத்து வந்தார்கள். இருந்தாலும் அந்த லீகில் இருந்தவர்கள் என்றால் அது விஜய் அஜித் தான் என கூறியிருந்தார் .
இருந்தாலும் தனஞ்செயன் இல்லை இல்லை இந்த நான்கு பேரும் தான் அந்த காலகட்டத்தில் சரிசமமான பொசிஷனில் இருந்தார்கள் என பேசி இருந்தார். அவர்களுக்கு அடுத்தபடியாக சிம்பு தனுஷ் சிவகார்த்திகேயன் என அடுத்த லெவலுக்கு போட்டி போட்டு வருகின்றனர் .இதில் எல்லோருடைய கேள்வி என்னவென்றால் விஜயின் இடத்தை பிடிக்க போவது யார் என்ற கேள்வி தான்.
இதற்கு தயாரிப்பாளர் டி சிவா கூறும் பொழுது விஜயின் இடத்தை யார் பிடிப்பார் சிவகார்த்திகேயன் தான் என யோசிக்காமல் பதிலளித்தார். இதை ஆமோதித்து அனைவருமே ஆம். அது அனைவருடைய கணிப்பாகவும் இதுவாகத்தான் இருக்கிறது. ஏனெனில் சிவகார்த்திகேயன் தான் இப்போது அடுத்தடுத்து படங்களை கொடுத்து ஒரு நல்ல பொசிஷனில் இருந்து வருகிறார். அதனால் விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் என்பது அனைவரின் கணிப்பாக இருக்கிறது என சித்ரா லட்சுமணன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.