×

அஜித் & விஜய் எல்லாம் பின்னுக்குத் தள்ளிய நடிகர் – தொலைக்காட்சி டி ஆர் பி யில் சாதனை!

பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜூன் நடித்த அலா வைகுந்தபுரம்லூ திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட போது சாதனை படைத்துள்ளது.

 

பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜூன் நடித்த அலா வைகுந்தபுரம்லூ திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட போது சாதனை படைத்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனின் திரைப்படங்கள் தெலுங்கில் மட்டுமில்லாது மலையாளம் மற்றும் தமிழ் மொழி ரசிகர்களாலும் பெரிதும் ரசிக்கப்படும். அதற்கு முக்கியக் காரணம் அவரின் நடனத்திறமையும், அவர் படத்தில் இடம்பெற்றிருக்கும் சண்டைக் காட்சிகளுமே. அந்த வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட மசாலா திரைப்படமாக அவர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது அலாவைகுந்தபுரம்லூ திரைப்படம். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

இதையடுத்து அந்த படம் கடந்த வாரம் பிரபல தெலுங்கு சேனலான ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது இந்த படத்தை 29.4 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இது இதுவரையில் எந்தவொரு தென்னிந்திய திரைப்படமும் நிகழ்த்திராத சாதனை. இதன் மூலம் ஏற்கனவே அஜித்தின் விஸ்வாசம் மற்றும் விஜய்யின் சர்கார் ஆகிய திரைப்படங்கள் செய்த சாதனையை அல்லு அர்ஜுன் முறியடித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News