ajith vijay
வாரிசு – துணிவு சரவெடிகள் ஒரு வழியாக வெடித்து முடிக்க அடுத்ததாக தளபதி – 67 மற்றும் ஏகே – 62 ஆகிய படங்களின் அப்டேட்கள் பற்றிய பேச்சுத்தான் இணையத்தை தெறிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே தளபதி – 67 படத்தின் முதல் செட்யூல் சென்னையில் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக படக்குழுவுடன் விஜய் வட இந்தியா டிரிப் போயிருக்கிறார்.
அங்கு அடுத்த செட்யூலுக்கான சூட்டிங் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஏகே – 63 படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில் இடையில் சில கசாமுசாக்கள் நடந்து அஜித்தை மிகவும் அப்செட்டில் ஆக்கியிருக்கிறது. பொங்கல் அன்று மிகவும் துணிச்சலாக விஜயுடன் மோதிய அஜித் அதில் வந்த வரவேற்பினால் அடுத்த களத்திற்கும் ஆயத்தமாக இருந்தார்.
vijay lokesh
கண்டிப்பாக தீபாவளி அன்று மோத தயாராக இருந்தார் அஜித். ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் மாற்றப்பட்ட நிலையில் இப்போது மகிழ் திருமேனி இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளிவராத நிலையில் பல ஊடகங்கள் இதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க : கதை தேர்வில் புது யுத்தியை கையாண்ட மக்கள் செல்வன்!.. இனி இவங்க இல்லாம துரும்பும் நகராது!..
மகிழ்திருமேனியிடம் ஏற்கெனவே கதை உள்ள நிலையில் அதை அஜித்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க வேண்டும். ஆனால் எப்படியாவது பிப்ரவரி மாதம் சூட்டிங்கை தொடங்க வேண்டும் என்ற நிலையில் இருப்பதால் அஜித்திற்காக ஏற்கெனவே நிறைய இளம் இயக்குனர்கள் கதையை வைத்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அஜித் நினைத்தால் இந்த சமயத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கதையை வாங்கி எடுக்கலாம்,
vijay
இப்படி செய்தால் அஜித் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக தெரிவார். ஆனால் இதை செய்வாரா என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம் அஜித்திற்கு தளபதி – 67 அப்டேட்டை பார்க்கும் போது ஒரு வெயிட்டான கதையோடு பில்லாவுக்கு பல மடங்கு வெயிட்டாக வந்து இறங்கினால் தான் தாக்கு பிடிக்க முடியும். அதனால் விஷ்ணு வர்தன் இயக்கினால் சரியாகும் என்ற எண்ணமும் அஜித் மனதில் இருப்பதாக சிலர் கூறிவருகின்றனர்.
மேலும் விஷ்ணு வர்தன் பாட்ஷாவின் உரிமையை சத்யஜோதியிடம் வாங்கி வைத்திருக்கிறாராம். ஆனால் விஷ்ணு வர்தன் ஹிந்தியில் ஒரு படத்தில் படு பிஸியாக இருப்பதால் அவர் வருவாரா இல்லையா என்ற குழப்பமும் நீடிக்கிறதாம். மேலும் தளபதி – 67 க்கு டஃப் கொடுக்கும் வகையில் பாட்ஷா – 2 வந்தால் தான் போட்டி கடுமையாக இருக்கும். அதனால் கண்டிப்பாக விஷ்ணு வர்தன் தான் ஏகே – 62 படத்தை இயக்க வருவார் என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
ajith3
நடிகர் தனுஷ்…
Kantara Chapter…
காந்தாரா சேப்டர்…
Manikandan: எந்த…
Ajith: நடிகர்…