×

6 லட்சத்தை வாங்கி ஏமாற்றிய அஜித்... சூடான புகாரை வைத்த தயாரிப்பாளர்.. ஷாக்கில் ரசிகர்கள்

தல அஜித் தன்னிடம் 6 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாக சினிமா தயாரிப்பாளர் வைத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
 
 

தமிழில் சரத்குமார் நடிப்பில் ‘கூலி’, கமல்ஹாசனின்  ‘வேட்டையாடு விளையாடு’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். இவர் செவன்த் சேனல் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். த்தின் உரிமையாளர் மாணிக்கம் நாராயணன். மாணிக்கம் தற்போது தல அஜீத் மீது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார். 

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், அஜித் என்னிடம் ரூ 6 லட்சங்கள் வாங்கி அவரது பெற்றோரை வெளிநாடு அனுப்பினார். பின்னர் அந்த பணத்தை தரவில்லை. தொடர்ந்து, என்னுடைய படத்தில் நடித்து கொடுங்கள் எனக் கேட்டேன். அதற்கும் சம்மதம் தெரிவித்தார். ஆனால், அது நடக்கவில்லை. 1995ல் வாங்கிய பணம் இன்றைய தேதியில் என்ன மதிப்பு இருக்கும். அதை இன்னும் எனக்கு தரவில்லை. படமும் நடிக்கவில்லை. அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டால் அவர் பிஸியாக இருக்கிறார் என்ற ஒற்றை பதில் மட்டுமே வருகிறது. 

மேலும், அஜித் உண்மையானவர் இல்லை. ஆளை வைத்து இமேஜை உருவாக்கி வைத்திருக்கிறார் என ஒருமையில் விளாசி தள்ளி இருக்கிறார். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு உருவாகி இருக்கிறது. அஜித் ரசிகர்களே அவர் பாவம் காசு கொடுத்திரலாமே என அஜித்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News