×

ரஜினியை ஓவர்டேக் செய்த அஜித் : டி.ஆர்.பியில் ஏமாற்றம் தந்த ‘தர்பார்’..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் தர்பார். ஆனால், இப்படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனால் மிகவும் அதிக விலைக்கு விற்கப்பட்ட இப்படம்  தங்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததாக வினியோகஸ்தர்கள் கூறினர்.  மேலும், ரஜினி மற்றும் முருகதாஸ் தரப்பிடம் நஷ்ட ஈடு கேட்கப்பட்ட பஞ்சாயத்தும் நடந்தது.
 

இப்படம் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மக்கள் வீட்டில் முடங்கியிருப்பதால் டி.ஆர்.பி எகிறும் என எதிர்பார்க்கப்பட்டதாம். ஆனால், அது ஏமாற்றத்திலே முடிந்துள்ளது. 1,45,93,000 புள்ளிகளை மட்டுமே டி.ஆர்.பி. யில் தர்பார் பெற்றுள்ளது.

ஆனால், ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட விஸ்வாசம் 1,81,43,000 தடப்பதிவுகளை பெற்றது. அதேபோல், சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட காஞ்சனா 3 திரைப்படம் 1,51,84,000 பதிகளை பெற்றுள்ளது. இத்தனைக்கும் காஞ்சனா 2 இதற்கு முன்பே ஒளிபரப்பான திரைப்படம்தான்.

ஆக, அஜித் நடித்த விஸ்வாசம், லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 படங்களை விட ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் குறைந்த பதிவுகளையே பெற்றுள்ளது. அதேநேரம், ஹிந்தி டப்பிங்கில் வெளியான தர்பார் 1,27,34,000 பதிவுகளை பெற்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News