Categories: Cinema News latest news

இதுக்கு அஜித் ஒத்துக்க மாட்டார்!..எங்களுக்கு வேற வழியும் இல்ல…! சோகத்தில் பிரபலம்…!

இயக்குனர் எச்.வினோத் அவர்களின் இயக்கத்திலும், போனிகபூர் அவர்களின் தயாரிப்பிலும் தல அஜித் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் வலிமை. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வலிமை பட்டத்திற்கான அப்டேட்டை தொடர்ந்து அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் வலிமை படம் குறித்த தகவலை நடிகர் மனோபாலா அவர்கள் கூறியுள்ளார். அதாவது வலிமை படப்பிடிப்பின் பொழுது பைக்கில் இருந்து அஜித் விழுந்து விட்டதாகவும், ஆனால் அவர் அவரை குறித்து கவலை கொள்ளாமல், பைக்குக்கு ஏதும் ஆகிவிட்டதா என்று பாருங்கள் என்னால் படப்பிடிப்பு தாமதமாக கூடாது என கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அஜித் படத்தில் டூப் போடுவதற்கு எப்பொழுதும் அனுமதிக்கவே மாட்டார். அது ஏமாற்றுவது போல இருக்கும் என்று கூறுவார். அவருக்கு குடும்பம் உள்ளது. இருந்தாலும், அவர் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துவார்.

 

நாங்கள் எவ்வளவு சொன்னாலும் அவர் கேட்கவே மாட்டார் என மனோபாலா மற்றும் திலிப் சுப்புராயன் அவர்கள் இருவரும் பேசிக் கொண் டுள்ளனர். மேலும் அஜித் சார் நீங்கள் உங்கள் குடும்பத்தையும் சற்று யோசிக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளார் மனோபாலா.

Manikandan
Published by
Manikandan