உங்களுக்காகத்தான் இது.. பொங்கல் தின வாழ்த்துக்களுடன் ரசிகர்களுக்கு அறிக்கை அனுப்பிய அஜித்

by Rohini |
ajith
X

poஅஜித்தின் வெற்றி:தற்போது துபாயில் நடந்த கார் ரேஸ் பந்தயத்தில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றிவாகை சூடி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவராக அஜித் காணப்படுகிறார். அவருடைய இந்த வெற்றிக்கு பல துறைகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் ரசிகர்கள் என தங்களுடைய மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

ரசிகர்களுக்கானது: அது மட்டும் அல்ல இதுவரை எந்த ஒரு ஊடகங்களுக்கும் பேட்டி கொடுக்காத அஜித் இந்த வெற்றிக்கு பிறகு பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டி தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. எப்பவும் போல ரசிகர்களுக்கான அறிவுரை என்பது அந்த பேட்டியில் முக்கியத்துவம் பெறுகிறது .ரசிகர்கள் எப்படி இருக்க வேண்டும் இருக்கக் கூடாது என்பது போன்று அஜித் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.

மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்: அது மட்டுமல்ல அஜித் வாழ்க விஜய் வாழ்க என கூறும் ரசிகர்களாகிய நீங்கள் எப்போது வாழப் போறீங்க என்றும் சரமாரியாக ரசிகர்களை பார்த்து கேள்வி கேட்டிருக்கிறார். ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்கானது. அதை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள். நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன். என் ரசிகர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

பைக் வீலிங் பாதுகாப்பில்லாதது: அது மட்டுமல்ல பைக் வீலிங் என்ற வகையில் பல இளைஞர்கள் ரோட்டில் சாகசம் செய்து சில சமயங்களில் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அது மிகவும் தவறானது. அதற்கு என ஒரு தனி இடம் இருக்கிறது .அது மிகவும் பாதுகாப்பானது .அதை மேற்கொள்ளுங்கள். இது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதனால் இனி மேல் ரோட்டில் பைக் வீலிங் என பாதுகாப்பு இல்லாமல் செய்ய வேண்டாம் என்றெல்லாம் பல அறிவுரைகளை வழங்கி இருக்கிறார் அஜித்.

கடந்த நான்கு நாட்களாக அஜித் சம்பந்தப்பட்ட செய்திகள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் இன்று பொங்கல் தினம் என்பதால் ரசிகர்களுக்கு தன்னுடைய வணக்கத்தையும் பொங்கல் தின வாழ்த்துக்களையும் கூறியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டு சொன்னது என்னவென்றால் துபாயில் நடந்த கார் ரேஸின் போதும் அந்த நிகழ்வுக்கு பின்னரும் எனக்கு நீங்கள் கொடுத்தவரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.




அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிக்க வார்த்தைகள் போதவில்லை. இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும் தான் என்னுடைய விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் உறுதுணையாக இருக்கின்றது. என்னுடைய இந்த பயணம் என்னை பற்றியது மட்டுமல்ல. உங்களைப் பற்றியும் தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் பொங்கல் தின மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அஜித்.

Next Story