அஜித் வாழ்க.. விஜய் வாழ்க!. நீங்க எப்ப வாழப்போறீங்க!.. இறங்கி அடித்த அஜித்!..

by Murugan |
ajitrh vijay
X

Vijay Ajith: தமிழ் சினிமா நடிகர்களில் அஜித்துக்கும், விஜய்க்கும் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 80களில் ரஜினி, கமலுக்கு இருந்தது போல இப்போது இவர்களின் ரசிகர்களுக்கும் சண்டை தொடர்ந்து வருகிறது. விஜயை ஒப்பிட்டால் அஜித்துக்கு ரசிகர் கூட்டம் கொஞ்சம் குறைவுதான். ஆனாலும், டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் அவர்கள் போடும் சண்டை ஓய்ந்தபாடில்லை.

20 வருடங்களுக்கு முன்பு அஜித்தும், விஜயும் தாங்கள் நடிக்கும் படங்களிலேயே மறைமுகமாக ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வார்கள். ‘இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?’ என அஜித் பாடுவார்.. ‘யாருடா உங்க தல?’ என திருமலை படத்தில் விஜய் கேட்பார். இருவருக்கும் இடையே அப்படி ஒரு மோதல் வந்தது.


ஆனால், வருடங்கள் போகப்போக இருவருமே பக்குவமடைந்து சினிமாவில் சண்டை போடுவதை விட்டுவிட்டனர். எப்போதாவது சந்திக்கும் வாய்ப்பு வந்தால் சிரித்த முகத்தோடு அன்பை பரிமாறிக்கொண்டார்கள். ஆனால், அவர்களின் ரசிகர்கள் மாறவில்லை. விஜய் படம் வந்தால் அஜித் ரசிகர்கள் அதற்கு எதிராக டிவிட்டரில் ஹேஷ்டேக் போடுவதும், அஜித் படம் வந்தால் விஜய் ரசிகர்கள் அசிங்கமாக ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் செய்வதும் என களோபரமாக இருக்கிறது.

‘ஒருவரை சந்தோஷப்படுத்த இன்னொருவரை திட்டாதீர்கள்’ என அஜித் ஒருமுறை அறிக்கையும் விட்டுப்பார்த்தார். ஆனால், அவரின் ரசிகர்கள் அதை கேட்கவில்லை. அஜித்தாவது அதை சொன்னார். ஆனால், விஜய் அது பற்றி எப்போதும் பேசுவதே இல்லை. இந்நிலையில்தான் துபாயில் கார் ரேஸில் கலந்து கொள்ள சென்ற அஜித் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசி வருகிறார்.


‘ரசிகர்கள் சண்டை போடாதீர்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தை பாருங்கள்’ எனப்பேசி ஏற்கனவே ஒரு வீடியோ வெளியிட்டார். இந்நிலையில், தற்போது அவர் சொல்லியுள்ள கருத்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இப்போது டாக்சிக் (Toxic) அதிகமாக இருக்கிறது. ஏன் இவ்வளவு வன்மம்?.. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்க்காதீர்கள். உங்கள் வாழ்வில் கவனம் செலுத்துங்கள்.

அஜித் வாழ்க.. விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்?.. உங்கள் அன்பிற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், தயவு செய்து உங்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளுங்கள். எனது ரசிகர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் நான் சந்தோஷமாக இருப்பேன்’ என அவரின் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார்.

அஜித்தின் அறிவுரையை அவரின் ரசிகர்கள் பின்பற்றுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story