பல வருடங்களுக்கு பின் அனிருத் ரிஷப்சனில் அஜித்குமார்!.. செம வைரல் போட்டோஸ்...

 
anirudh

நடிகர் அஜித்குமார் அசல் திரைப்படத்திற்கு பின் அவர் நடித்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலேயே கலந்து கொள்வதில்லை. அதேபோல் எந்த சினிமா நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வதில்லை.. ஊடகங்களுகு பேட்டி கொடுப்பதில்லை.. செய்தியாளர்களை சந்திப்பதில்லை. அதேநேரம் கடந்து சில வருடங்களாக அவர் கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அந்த நாடுகளில் உள்ள ஆங்கில ஊடகங்களுக்கு அவர் பேட்டி கொடுக்கிறார்..

ajith

இந்நிலையில்தன, நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனது சினிமா நட்பு வட்டாரத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டு அனிருத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ajith

இந்த பார்ட்டியில் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சிம்பு, நயன்தாரா, விக்னேஷ் சிவன், இயக்குனர் நெல்சன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட அஜித் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

anirudh

Murugan ..
Murugan ..

5190 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web