ஃபிரேம பாருங்கஜி!... அனிருத் ரிசப்ஷனில் ரஜினி..அஜித்.. தோனி.. செம வைரல்...

கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித்குமார்.
 
ajith dhoni


கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித்குமார். தற்போதைய முதல்வர் விஜய் சினிமாவில் நடித்துகொண்டிருந்த போது அவருக்கு போட்டி நடிகராக வலம் வந்தார். விஜய்க்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் அஜித் இருந்தார். கடந்த சில வருடங்களாகவே அஜித் கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார்.

ajith

அதனால் திரைப்படங்களில் அதிகம் நடிப்பதில்லை. தற்போது அவரின் டேர் டெவில் திரைப்படம் ஹைதராபாத்தில் துவங்கியிருக்கிறது. விரைவில் அந்த படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்நிலையில்தான், பல வருடங்களாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத அஜித் பல வருடங்கள் கழித்து இசையமைப்பாளர் அனிருத் - காவ்யா மாறனின் ரிசப்ஷன் நேற்று சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்த போது அதில் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார்..

ajith

இதில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன், லோகேஷ் கனகராஜ், நயன்தாரா, விக்னேஷ், சிம்பு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர். அனிருத்தின் நட்பு வட்டாரத்திற்காக இந்த வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்தான் அஜித் கலந்து கொண்டார்.

anirudh

அப்போது ரஜின், தோனி ஆகியோருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் ரஜினி, தோனி, அஜித் ஆகிய மூவரும் ஒரு ஃபிரேமில் இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது..  

Murugan ..
Murugan ..

5189 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web