அப்பலாம் அஜித்துக்கு 2 ஆயிரம்தான் சம்பளம் - பிரபலம் சொன்ன தகவல்
அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் அஜித்குமார். தொடர்ந்து காதல் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஆக்சன் ஹீரோவாக மாறினார். பல படங்களில் ஆக்சன் ஹீரோவாக நடித்து பில்லா, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாகவும் மாறினார்.
விஜய்க்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக அஜித் இருக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய்க்கும், அஜித்துக்கும் சினிமாவி3 30 வருடங்களுக்கும் மேல் போட்டியே இருந்தது.
ஆனால் நடிகர்களில் அஜித் வித்தியாசமானவர். விளம்பர படங்களில் நடிக்க மாட்டார்.. தான் நடிக்கும் படங்களின் புரமோஷன்களிலேயே கலந்து கொள்ளமாட்டார். மேலும், படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டு கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார்.
அதேநேரம் கார் ரேஸில் ஈடுபட்ட பின் பண தேவைக்காக அஜித் தற்போது விளம்பர படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார். ஏற்கனவே சில குளிர்பான விளம்பரம் மற்றும் பிஸ்கட் விளம்பரத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் சுரேஷ் சுந்தர மேனன் ஊடகம் ஒன்றில் பேசியபோது அஜித் பற்றி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்தார்.
அஜித் முதலில் மாடலிங் துறையின் மூலமாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பல விளம்பர படங்களிலும் இணைந்து நாங்கள் பணியாற்றியிருக்கிறோம். அப்போது ஒரு விளம்பர படத்தின் மொத்த தயாரிப்பு செலவே ரூ.60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரைதான் இருக்கும். மாடலாக நடித்த அஜித்துக்கு 2 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டது. ஏ.ஆர்.ரகுமானுக்கு 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்’ என கூறியிருக்கிறார்.
