பெல்ஜியம் போட்டியில் 2வது இடத்தை பிடித்த அஜித்தின் டீம்!.. குவியும் பாராட்டு!…
நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடும் போட்டி, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது போன்ற பல விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்.
அதேபோல் தனியாக பைக்கில் பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்யும் பழக்கமும் உடையவர். கடந்த சில வருடங்களாகவே அஜித் உலகமெங்கும் நடக்கும் பல கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.. இதற்காக அவர் ஒரு தனி டீமையே உருவாக்கியிருக்கிறார். துபாயில் நடந்த முதல் போட்டியிலேயே அஜித்தின் டீம் மூன்றாவது வரிசை வென்றது.. அப்போதே பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
இந்நிலையில் பெல்ஜியத்தில் தற்போது நடைபெற்று வந்த 24H Series தொடரில் GR3 PRO பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து இந்திராவுக்கு பெருமை சேர்த்திருக்கிறது அஜித்தின் ரேசிங் அணி. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலை தினங்களில் வைரலாகி வரும் நிலையில் அஜித்துக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
