Connect with us

latest news

விஜய் பட தயாரிப்பாளர் செய்த வேலை!.. அப்ப எடுத்த முடிவுதான்!.. அஜித்தோடு பாலிசி இதுதான்!..

Ajith: அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித்குமார். அதன்பின் பல படங்களிலும் காதல் கதைகளில் சாக்லேட் பாயாக நடித்தவர் ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறினார். பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்கள் இவரை மாஸ் நடிகராக மாற்றியதோடு அவருக்கு அதிக ரசிகர்களையும் உருவாக்கியது. அதே நேரம் தனது ரசிகர்கள் அரசியல் தொடர்பான வேலைகளை செய்தார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக தனது ரசிகர் மன்றங்களை மொத்தமாக கலைத்து விட்டார் அஜித். ஆனாலும் அஜித் ரசிகர்கள் குறையவில்லை.

விஜய்க்கு அடுத்து அஜித்துக்குதான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேநேரம் ‘என் ரசிகர்களை எப்போதும் என் சுயநலத்துக்காக பயன்படுத்த மாட்டேன். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். குடும்பத்தை பாருங்கள்’ என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் அஜித். சினிமாவில் நடிப்பதில் மற்ற நடிகர்களை விட அஜித் நிறைய பாலிசிகளை கடைப்பிடித்து வருகிறார். தான் நடிக்கும் படங்களின் புரோமோசனுக்கு போகக்கூடாது. மற்ற நடிகர்களின் படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும் செல்லக்கூடாது. சினிமா பிரபலங்கள் தொடர்பான எந்த விழாவுக்கும் போகக்கூடாது, செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது, பேட்டி கொடுக்கக் கூடாது என்றெல்லாம் இவரிடம் பல பாலிசி இருக்கிறது

ஒன்று அவர் நடிக்கும் படம் தொடர்பான ஷூட்டிங்கில் இருப்பார். இல்லையென்றால் வீட்டில் இருப்பார். இந்த இரண்டு இடங்களில் மட்டும்தான் அஜித்தை பார்க்க முடியும். கடந்த சில மாதங்களாக அஜித் கார் ரேஸில் இருக்கிறார். அடுத்து அவர் நடிக்கவுள்ள படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கிறார். அனேகமாக நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. அஜித் கடைப்பிடிக்கும் இன்னொரு பாலிசி உண்டு. தான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் தயாரிப்பாளர் ஒரே நேரத்தில் மற்றொரு நடிகரின் படத்தையும் தயாரிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்.

ஒருமுறை ஐங்கரன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் விஜயை வைத்து வில்லு, அஜித்தை வைத்து ஏகன் ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்தது. ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பாக நடிகர் அருண்பாண்டியன் இந்த படங்களை தயாரித்தார். அப்போது அவர் விஜயின் வில்லு பட ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு அடிக்கடி செல்வாராம். ஆனால் அஜித் நடிக்கும் ஏகன் பட ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு செல்லவே மாட்டாராம். வில்லு ஷூட்டிங் இல்லை என்றால் மட்டுமே ஏகன் ஷூட்டிங் பக்கம் போயிருக்கிறார்.

இதற்காக அஜித் அவரிடமே கோபப்பட்டிருக்கிறார். எனக்கு ஒரு பாலிசி உண்டு. என்னை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர் மற்றொரு நடிகரின் படத்தை தயாரிப்பது எனக்கு பிடிக்கவே பிடிக்காது. தற்போது அதை நீங்களும் உறுதி செய்திருக்கிறீர்கள்’ என்று சொல்லி இருக்கிறார். அதன்பின் கடந்த பல வருடங்களாகவே அஜித் அந்த பாலிசியை ஸ்ட்ரிக்ட்டாக ஃபாலோ செய்து வருகிறாராம்

Continue Reading

More in latest news

To Top