1. Home
  2. Latest News

உயிர் போனா போகட்டும்!.. 20 வருஷம் கழிச்சிதான் புரியும்!... அஜித் ஃபீல் பண்ணி பேசிட்டாரே!....

ajith


தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் அஜித். சினிமாவில் நடிப்பது அவருக்கு தொழில் என்றாலும் நீண்ட தூரம் பைக்கில் பயணிப்பது கார், ரேஸில் கலந்து கொள்வது, துப்பாக்கிச்சூடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது என இவருக்கு பிடித்த விஷயங்கள் ஏராளம். மற்ற நடிகர்களைப் போல இவர் சினிமா விழாக்களில் கலந்து கொள்வது இல்லை. தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அஜித் கலந்து கொள்வதில்லை. ஆனாலும் இவரின் திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்று வருகிறது. விஜய்க்கு அடுத்து இவருக்கு அதிக ரசிகர்களும் இருக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வரும் அஜித் அவ்வப்போது ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட கரூர் சம்பவம் பற்றி விஜய்க்கு ஆதரவாக அவர் கருத்து கூறியிருந்தர். ஆனால் அதை திருத்தி சிலர் விஜய்க்கு எதிராக அஜித் பேசியிருப்பதாக திரிக்க சாணக்யா என்கிற ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ‘நான் எப்போதும் விஜய்க்கு நன்மையே நினைக்கிறேன். வாழ்த்தி இருக்கிறேன். நான் பேசியதை அவருக்கு எதிராக திரிப்பவர்கள் அமைதியாக இருக்கவும்’ என பேசி இருக்கிறார் அஜித்.

ajith

மேலும் ‘என்னுடைய நல்ல எண்ணங்களை சில ஊடகங்கள் மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கவில்லை. நாம் நச்சு கலந்த ஒரு சமூகத்தில் இருக்கிறோம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய இந்த ஆங்கில ஊடகத்திற்கான பேட்டி 10-20 வருடங்கள் கழித்து மிகப்பெரும் பேசப் பொருளாக மாறும்’ என சொல்லி இருக்கிறார் அஜித்.

அதோடு ‘சில சமூகங்கள் சுரண்டப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறது. அதேபோல மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க அரசியல் கட்சிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் இருக்கிறார்கள். ஒருபக்கம், உள்நோக்கத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பது போல சில போலி சமூக ஆர்வலர்களும் இங்கே இருக்கிறார்கள். அது போன்ற போலிகள் செய்யும் மூளைச்சலவையிலிருந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

உங்கள் குடும்பத்தை முதலில் பாருங்கள். பார்ப்பதற்கு தகுதியானது என நினைத்தால் என் திரைப்படங்களை பாருங்கள் என்று என் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். என் படத்தை பாருங்கள் என்று எப்பொழுதும் நான் வற்புறுத்த மாட்டேன். அதேபோல் அரசியலுக்கு வந்து நான் ஓட்டு கேட்டும் வரமாட்டேன். எனக்கு அதில் ஆர்வம் இல்லை.

என்னை பிடிக்காதவர்கள் எப்போதும் நான் ஒரு வேற்று மொழிக்காரன் என தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். என் பூர்வீகம் பற்றி பேசுகிறார்கள். ஒரு நாள் வரும். அதே நபர்கள் ஒருமித்த குரலில் என்னை தமிழன் என அழைப்பார்கள். இந்த கார் ரேஸில் சாதித்து இந்த நாட்டிற்கும் இந்த மாநிலத்திற்கும் பெருமை சேர்ப்பேன் என நம்புகிறேன். அதற்காக என் உடலையும் என் முழு ஆன்மாவையும் அர்ப்பணிக்கிறேன். என் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்த பணியில் என் உயிரே போனாலும் பரவாயில்லை’ என பீல் பண்ணி பேசியிருக்கிறார் அஜித். அவர் இந்த பேட்டி பலரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.

 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.