Ajith: என் அப்பா இறந்தபோது அப்படி பண்ணாங்க!.. யார சொல்றது?.. அஜித் நொந்துபோயிட்டாரே!..
விஜய் போலவே அதிக ரசிகர்களை கொண்டிருப்பவர் நடிகர் அஜித். பல வருடங்களாகவே இவருக்கும் விஜய்க்கும் சினிமாவில் போட்டி இருந்தது. ஆனால் தற்போது விஜய் தீவிர அரசியலுக்கு போய்விட்ட நிலையில் அவர் சினிமாவில் தொடர்வாரா என்பது தெரியாத நிலையில் அஜித்துக்கு எந்த போட்டியும் இல்லை. பொதுவாக அஜித் கடந்த பல வருடங்களாகவே எந்த ஊடகங்களுக்கும் பேட்டி கொடுக்கவில்லை அதே நேரம் கார் ரேஸில் இருக்கும் அஜித் அவ்வப்போது சில ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
அப்படி அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அவர் மனம் திறந்து பல விஷயங்களை பேசியிருக்கிறார். ‘கரூர் சம்பவத்திற்கு ஒருவரை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது நம் அனைவருமே பொறுப்பேற்க வேண்டும்’ என விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதன்பின் ‘நான் பேசியதை விஜய்க்கு எதிராக சிலர் சித்தரிக்கிறார்கள். அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்’ என்றெல்லாம் பேசினார். அதோடு நான் தமிழன் இல்லை என்று சிலர் பேசுகிறார்கள். ஆனால் ஒரு நாள் அவர்கள் நான் தமிழன் என சத்தமாக சொல்ல வைப்பேன். கார் ரேஸில் சாதனை செய்து இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன்’ என்றெல்லாம் தடாலடியாக பேசியிருக்கிறார் அஜித்.

குறிப்பாக நடிகரான பின் பிரைவசியாக இருக்க முடியவில்லை. என் விருப்பப்படி எங்கும் தனியாக செல்ல முடியவில்லை. என் குழந்தைகள் இருவரும் ‘அப்பா உங்களால் ஏன் மற்ற அப்பாக்களை போல எங்களுடன் இருக்க முடியவில்லை?. ஏன் பள்ளிக்கு வர முடியவில்லை?’ என்று கேட்கிறார்கள்’ என்று ஃபீல் பண்ணி பேசினார் அஜித்.
மேலும் ‘என் தந்தை உயிரிழந்த போது அவரின் உடலை நான் அடக்கம் செய்ய எடுத்து சென்று கொண்டிருந்த போது சில ஊடகங்கள் எங்கள் பின்னால் வந்து கேமராவுடன் அதை படம் பிடிக்க முயற்சி செய்தார்கள். உயிர் இல்லாத அந்த உடலின் வீடியோ காட்சிகளை பதிவு செய்ய முயற்சி செய்தார்கள். மிகவும் கஷ்டப்பட்டு அதை தடுத்தோம். ஊடகங்களே இப்படி எனில் ரசிகர்களையும், தொண்டர்களையும் நாம் குறை சொல்ல என்ன உரிமை இருக்கிறது?.. ஏற்கனவே நான் சொன்னது போல இந்த தவறுகளுக்கு நானும் பொறுப்பேற்கிறேன். என்னிடமும் தவறுகள் இருக்கிறது’ என பேசியிருக்கிறார் அஜித்.
