பள்ளிக்கு விசிட்!.. மகனுக்கு சர்ப்பரைஸ் கொடுத்த ஏ.கே... வைரல் போட்டோ...

 
ajith with son

நடிகர் அஜித் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து வெளிநாட்டிலே இருப்பதால் அவரால் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. அதேநேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்னை வந்து அவர் தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் நேரத்தை செலவிடுகிறார்.

அவரின் குடும்பத்தினர்களும் அஜித்தின் கனவை புரிந்து கொண்டு அவருக்கு பிடித்ததை செய்ய அனுமதிப்பதால் அஜித்தும் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் தற்போது வரை அஜித் எந்த சினிமா சூட்டிங்கிலும் கலந்து கொள்ளவில்லை..

ajith

இந்நிலையில்தான், திடீரென சென்னை வந்த அஜித் தனது மகன் ஆத்விக் படித்து வரும் பள்ளிக்கு சென்று மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.. தந்தையை பார்த்ததும் மகன் ஆத்விக் ஓடி வந்து தந்தையை கட்டிக் கொண்டார்.. அந்த காட்சி பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Murugan ..
Murugan ..

5147 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web