
Cinema News
நடிப்புக்கு Bye Bye… ரசிகர்களின் தலையில் குண்டை தூக்கிப்போட்ட அஜித்… ஏன் இந்த முடிவு??
ரசிகர்களின் ‘தல’யாக திகழும் அஜித்குமார், தற்போது “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
“துணிவு” திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால் இத்திரைப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ajith Kumar
ஏற்கனவே விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படமும் பொங்கலுக்குத்தான் வெளிவர உள்ளதாக அறிவிப்பு வந்தது. இதனை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து விஜய் திரைப்படமும் அஜித் திரைப்படமும் மோதவுள்ளதாக தகவல் வருகிறது.
“துணிவு” திரைப்படத்திற்குப் பிறகு அஜித்குமார், விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டது எனவும் விரைவில் இத்திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் எனவும் தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்திற்கு பிறகு அஜித் குமார் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் நடிப்புக்கு இடைவெளி விடப்போவதாக ஒரு தகவல் வெளிவருகிறது.

Ajith Kumar
அந்த ஒன்றரை வருடத்தில் அஜித்குமார் 7 கண்டங்கள், 60 நாடுகளுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளாராம். இச்செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமார் சமீபத்தில் கூட ஐரோப்பிய நாடுகளில் சுற்றிக்கொண்டிருந்தார். மேலும் சில நாட்களுக்கு முன் லடாக் பகுதியில் பைக்கில் பயணம் மேற்கொண்டார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்தது. தற்போது அஜித்குமார் பேங்காக்கில் இருப்பதாக தகவல் வருகிறது. உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுவதுதான் அஜித்தின் பல நாள் கனவாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த கனவை அவர் கூடிய விரைவில் நிறைவேற்றப்போகிறாராம்.

Ajith Kumar
இது ஒரு பக்கம் மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், “ஏற்கனவே வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில்தான் அஜித் நடித்து வருகிறார். இந்த நிலையில் அஜித் திரைப்படத்திற்கு இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டுமே” என்று ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.