×

இந்தியில் ரீமேக் ஆகும் அஜித்தின் வேதாளம் – இவர்தான் ஹீரோ!

அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்டமான வெற்றி பெற்ற வேதாளம் திரைப்படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.

 

அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்டமான வெற்றி பெற்ற வேதாளம் திரைப்படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.

அஜித் –சிவா கூட்டணியில் வந்து வெற்றி பெற்ற படங்களில் வேதாளம் முக்கியமானப் படமாகும். 2015 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்த படம் பிரம்மாண்டமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். அதற்கான உரிமையை தயாரிப்பாளர் பூஷன் குமார் கைப்பற்றியுள்ளார்.

அஜித் நடித்த கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாம் நடிக்க ரோஹித் தவன் இயக்க உள்ளார். மற்ற கதாபாத்திரங்களுக்கான தேர்வுகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அஜித் நடித்த வீரம் படத்தை ரீமேக் செய்து அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் இந்தியாவில் வெற்றியடையும் படங்கள் இப்போது அதிகமாக பாலிவுட்டில் ரீமேக் ஆக ஆரம்பித்துள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News