Categories: Cinema News latest news

விஜய் கட்சிக்கு அஜீத் ஆதரவு… சிம்பாலிக்கா சொல்லி தெறிக்க விட்டுட்டாரே…!

விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கியதில் இருந்தே அஜீத்தோட ஆதரவு எப்போ வரும்னு எதிர்பார்த்து இருந்தாங்க. அது இப்போ நடந்துருக்கு என்கிறார் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. இது குறித்து அவர் வேறு என்னவெல்லாம் சொல்கிறார்னு பார்க்கலாமா…

அஜீத் ஆதரவு

விஜய்க்கு அஜீத் ஆதரவு. அஜீத்துக்கு விஜய் ஆதரவு. இங்கு நண்பர்களாகவே இருந்துட்டுப் போகலாம். சோஷியல் மீடியாவில் விஜய், அஜீத் ரசிகர்களும் போடும் சண்டை உண்மை கிடையாது என இருவரும் நிரூபிக்கப் போகிறார்கள்.

Ajith1

மங்காத்தா படத்துல தியேட்டர் சீன் வரும். அந்தத் திரையில் பின்னணியில் காவலன் படத்தோட காட்சி வரும். அந்த வகையில் விஜய் படத்தை அஜீத் கெடுத்தது இல்லை. அஜீத் படத்தை விஜய் கெடுத்தது இல்லை. ஆனால் ரசிகர்கள் எதிரும் புதிருமாக இருப்பது நியாயமில்லை. எனக்குத் தெரிந்து விஜய் தனது கடைசி படம்னு கோட் படத்தைத் தான் முடிவு பண்ணிருப்பாரோன்னு தோணுது.

சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கியைத் தந்து தன்னோட பட்டத்தையும் பொறுப்பையும் பார்த்துக்கோன்னு சொல்லி இருப்பார். அதே மாதிரி கடைசியில விஜயயோட மகள் ‘நீ யாரோட ஃபேன்’னு கேட்கும்போது ‘தல ஃபேன்’னு சொல்லும்போது தியேட்டரே அதிரும். நிச்சயமா வெங்கட்பிரபு விஜய் சொல்லாம அப்படி ஒரு காட்சியை வச்சிருக்க மாட்டாரு.

விஜய் டயலாக்

குட் பேட் அக்லி படத்துல விஜய் பேசுற ஒரு டயலாக்கை அஜீத் பேசுறாராம். அது பிரமாதமாக வந்ததாக யூனிட்டே கைதட்டியதாம். அது என்னன்னா போக்கிரி படத்துல விஜய் பேசுற நீ படிச்ச ஸ்கூல்ல நான் தான் ஹெட்மாஸ்டர்னு சொல்வாங்க. அப்படி ஒரு டயலாக். அதை ஒட்டிப் பேசுறாராம் அஜீத்.

சமுத்திரக்கனி ஆதரவு

விஜய் 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்குறதுக்கு எவ்ளோ சிரமப்பட்டுருக்கணும். அவர் இப்போது அதை வேணாம்னு சொல்றதுக்கு எவ்ளோ துணிச்சல் வேணும். நானும் ரொம்ப கஷ்டப்பட்டுத் தான் இந்த அளவுக்கு வந்துருக்கேன். அதனால விஜிய்க்கு என்னோட பெரும் ஆதரவு என்கிறார் சமுத்திரக்கனி.

இதே மனநிலை தான் அஜீத்துக்கும் வந்துள்ளது. இருவரும் சம காலத்தில் வந்தவர்கள். ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜயை விட கம்மியாக சம்பளம் வாங்கியவர் அஜீத். அதன்பிறகு இருவரும் வெவ்வேறு துருவங்களாக வந்து அசுர வளர்ச்சியை அடைஞ்சிட்டாங்க.

கார் கலர்

இன்னைக்கு 250 கோடியைத் தூக்கிப் போட்டுட்டு வர்றாருன்னா நம்மோட ஆதரவும் இருக்கட்டுமே என்ற மனநிலைக்கு அஜீத் வந்துருக்கும். அதனோட வெளிப்பாடு தான் சமீபத்துல அஜீத் கார் ரேஸ்சுக்காக எடுத்த ஸ்டில். கார் கலரையும், அஜீத்தோட டிரஸ் கலரையும் பார்த்ததும் அப்படியே அஜீத் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க.

Ajith Vijay

என்னன்னா சிகப்பு மஞ்சள் சிகப்பு. இதுதான் தவெகவோட கொடி. போர் யானை. இது வந்து எதேச்சையாக நடக்குற விஷயம் அல்ல. இது அஜீத்தாக செய்த விஷயமாகத் தான் இருக்கும். தன்னோட நண்பர் அரசியல் களத்துக்கு வந்துருக்காரு. அவருக்கு நான் தரக்கூடிய மறைமுகமான ஆதரவை இதைத் தெரிவிக்கிறேன் என்ற சமிக்ஞை தான் இது.

எப்பவுமே எலியும் பூனையுமா இருக்குறதை ஒரு கட்டத்துல மறந்துடுவாங்க. என்னத்தை எடுத்துட்டுப் போகப்போறோம்? ஒருத்தருக்கு ஒருத்தர் ஹாய் சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருப்போமே என்ற முடிவுக்கு வந்துருவாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v