Categories: Cinema News latest news

அஜித் விஷயத்தில் சொன்னதை செஞ்சிட்டாரே சிவராஜ்குமார்! பாத்து கத்துக்கோங்கப்பா

தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஹீரோவாக மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கென தமிழ் நாட்டில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.தற்போது அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் ப்ரடக்‌ஷன் வேலைகளுக்காக படக்குழு தயாராக இருக்கிறார்கள்.

விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிஸியாகி விடுவார். ஏற்கனவே முதல் கட்ட செட்யூல் முடிந்திருக்கிறது. ரசிகர்களையும் தாண்டி அஜித்தை ஃபாலோ செய்யும் பிரபலங்கள் ஏராளம். அது கோலிவுட்டில் மட்டும் இல்லாமல் மற்ற மொழி சினிமாக்களிலும் அஜித்துக்கென பல பிரபலங்கள் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அஜித்தை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவரிடம் ஒரு முறைதான் பேசியிருக்கிறேன் இருந்தாலும் நல்ல மனிதர் என்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்தால் அதில் நான் நடிக்கவும் ஆசைப்படுகிறேன் என்றும் கூறியிருந்தார்.

விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்தின் ஆட்டியூட், மேனரிசம், காமெடி என அசத்தியிருப்பார். சீனுக்கு சீன் அஜித் அந்த படத்தில் பிரமிக்க் வைத்திருப்பார் என விஸ்வாசம் திரைப்படத்தை பற்றியும் அஜித்தை பற்றியும் பெருமையாக பேசியிருந்தார் சிவராஜ்குமார்.

அவர் சொன்னதை போல் விஸ்வாசம் திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் ஆகவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதில் சிவராஜ்குமார்தான் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அஜித்தை மாதிரி சிவராஜ்குமாரும் அந்தப் படத்திற்கு மிக பொருத்தமாக இருப்பார் என்று ஆணித்தரமாக சொல்லமுடியும். இங்கு எந்தளவு ஹிட்டானதோ அதே அளவு கன்னடத்திலும் ஹிட்டானால் நமக்குத்தான் பெருமை.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini