தலைமுடியை பிடிச்சு ஆட்டிய ரசிகர்... கடுப்பில் அஜித் செய்த செயல்! வைரலாகும் வீடியோ

by Rohini |
ajith
X

டிரெண்டிங்கான அஜித்: கடந்த நான்கு நாட்களாக சோசியல் மீடியா முழுவதும் அஜித்தை பற்றிய செய்திதான் உலா வந்து கொண்டிருக்கிறது. நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் அஜித். துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அவருடைய அணி மூன்றாவது இடம் பிடித்த சாதனை படைத்திருக்கிறது. அதுவரை மோட்டார் ஸ்போட்ஸில் ஐரோப்பா நாடு மட்டுமே பிரபலமாகி இருந்த நிலையில் இப்போது இந்தியாவும் மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம் காட்டுவதாக இவருடைய இந்த வெற்றி பல்வேறு உலக நாடுகளுக்கு உணர்த்தி இருக்கிறது.

விரதத்தை முடித்துக் கொண்ட அஜித்: இதுதான் அஜித்தின் நீண்ட நாள் கனவாகவும் இருந்தது. அதன் முதல் படியை தான் இப்போது அஜித் எடுத்து வைத்திருக்கிறார். அடுத்ததாக ஐரோப்பாவில் நடக்கும் போட்டியிலும் அஜித் தன்னுடைய அணியுடன் கலந்து கொள்ள இருக்கிறார். பொதுவாக ரசிகர்கள் ஊடகங்கள் என எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி இருந்த அஜித் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருக்கின்றார் .

ரசிகர்கள் எப்படி இருக்க வேண்டும்?: பேட்டியே கொடுக்காமல் இருந்த இவர் இந்த வெற்றிக்கு பிறகு பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். ரசிகர்களுக்கு தேவையான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இவருடைய இந்த பேட்டி தான் ஒவ்வொரு சேனலும் முன்னிலைப்படுத்தி வருகிறது. எப்போதுமே ரசிகர்கள் எப்படி இருக்க வேண்டும் இருக்கக்கூடாது என்பதை கூறி வருபவர் அஜித்.

அது மட்டுமல்ல இவர் ஏன் பொது இடங்களுக்கு வருவதில்லை என்பதற்கான காரணமும் பல செய்திகளில் வெளிவந்திருக்கின்றன. ரசிகர்களின் செயல்களால் அவர்களுடைய நடவடிக்கைகளால் கோபமடைந்ததால் அஜித் வெளியே வருவதை தவிர்த்து வருகிறார் என்றெல்லாம் பல பிரபலங்கள் கூறி நாம் கேட்டிருக்கிறோம். அந்த வகையில் இப்போது கூட துபாயில் அவரைப் பார்க்க பல ரசிகர்கள் கூடியிருந்தனர்.

அவர் வெற்றிக்கு பிறகு கூட்டத்தின் நடுவே நடந்து வந்து கொண்டிருந்த போது அஜித்தின் தலைமுடியை ரசிகர் ஒருவர் பிடித்து ஆட்டி இருக்கிறார். ஏற்கனவே ரசிகர்களின் இரைச்சலை தாங்க முடியாமல் காதை மூடிக் கொண்டு வந்த அஜித் ரசிகரின் இந்த செயலால் அந்த ரசிகரின் கையை உடனே பிடித்து சற்று முறைத்து விட்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஒரு நிமிடம் கடுப்பாகிவிட்டார் அஜித் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாகவே ஒருவரின் தலைமுடியை பிடித்து இழுத்தாலே கோபம் வரத்தான் செய்யும். அத்தனை கூட்டத்தின் நடுவில் இப்படி ரசிகரின் இந்த செயல் அஜித்தை மிகவும் வெறுப்பேற்றி இருக்கிறது.



Next Story