Categories: Cinema News latest news

அட இது செம மாஸ்!..அதே மூணு எழுத்து செண்டிமெண்ட்!..அஜித் 61 பட தலைப்பு இதுதானாம்…

அஜித் குமார் தற்போது தனது 61 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த பல மாதங்களாகவே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இத்திரைப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், மகாநதி ஷங்கர் போன்றோர் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

“AK 61” திரைப்படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் அஜித் குமார் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதன் பின் இந்தியாவிற்கு திரும்பிய அஜித்குமார், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.

அதனை தொடர்ந்து தற்போது தாய்லாந்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு இத்திரைப்படத்தின் டைட்டில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் டைட்டில் “துணிவே துணை” என ஒரு தகவல் இணையத்தில் பரவி வந்தது. ஆனால் அஜித்தின் செண்டிமெண்ட்டான மூன்று எழுத்து டைட்டிலே இத்திரைப்படத்திற்கும் டைட்டிலாக இருக்கும் என கூறப்படுகிறது.

அதாவது “வீரம்”, “வலிமை” ஆகிய மூன்றெழுத்து டைட்டில்களை தொடர்ந்து இத்திரைப்படத்திற்கு “துணிவு” என பெயர் வைத்திருக்கிறார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து ஒரு நிரூபனமான தகவல் வருகிறது. எனினும் இன்று மாலை 6 மணிக்கு மேல் டைட்டில் என்ன என்று தெரிந்துவிடும்.

அஜித் குமார் “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து “AK 61” திரைப்படத்திலும் ஹெச் வினோத்துடன் இணைந்துள்ளார். அதே போல் இத்திரைப்படத்தையும் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் குமார் “AK 61” திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Arun Prasad
Published by
Arun Prasad