Categories: Cinema News latest news

இது வேண்டாத வேலை.! முக்கிய ஏரியாக்களை மொத்தமாக காப்பி அடித்த படக்குழு.!

அஜித் நடிப்பில் தற்போது வலிமை ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. ஜல்லிக்கட்டில் எப்போது காளையை அவிழ்த்துவிடுவார்கள் என்பது போல ரசிகர்கள் ஆவலுடன் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அடுத்த வாரம் வியாழன் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த கொண்டாட்டத்துடனே, அஜித்தின் அடுத்த பட அறிவிப்பும் வெளியாகி விட்டது. தற்போதைக்கு AK61 என மட்டும் தலைப்பு வைக்கப்பட்டு ஒரு நெகட்டிவ்  போட்டோவை மட்டும் தயாரிப்பளார் போனி கபூர் வெளியிட்டார்.

இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம். இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். அதற்காக ஹைதிராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறதாம்.

இதையும் படியுங்களேன் – விழித்துக்கொண்ட வெங்கட் பிரபு.! இளைஞர்கள் குதூகலிக்க மன்மதலீலை தியேட்டரில்…

தற்போது அங்கு எந்த செட் போடப்படுகிறது என தகவல் வெளியாகியள்ளது சென்னை அண்ணா சாலையை அப்படியே செட் அமைத்து வருகிறார்களாம். சென்னை அண்ணா சாலையில் ஷூட் செய்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பது சரிதான்.

ஆனால், சென்னையில் கூட செட் அமைக்க வேண்டாம் என தொடர்ந்து அஜித் படங்கள் அனைத்தும் ஹைதிராபாத்திலேயே செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது சென்னை ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்து வருகிறது. சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் அவ்வப்போது தனது ஆஸ்தான நாயகரை சென்று பார்த்துவிட்டு வரலாம் என கணக்கு போடுகிறார்கள் போல.

Manikandan
Published by
Manikandan