ajith
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ஏகப்பட்ட ரசிகர்களை
கொண்டு ஒரு முன்னனி நடிகராக வலம் வரும் அஜித்தின் அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படம் ஏனோ சில தடங்கல்களை சந்தித்து கொண்டே வருகின்றது.
விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து விலகியது, கதைகளில் சில பல மாற்றங்கள், மகிழ் திருமேனி உள்ளே வந்தது என திடீர் திருப்பங்கள் அஜித்தின் படத்தில் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. பிப்ரவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப் பட வேண்டிய படம் இன்று வரை எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.
ஒரு பக்கம் லியோ படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் வருகிற மே 1 ஆம் தேதி ஏகே 62 படத்திற்கான அப்டேட் கண்டிப்பாக வரும் என கூறப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வமாக மகிழ் திருமேனிதான் படத்தை இயக்குகிறார் என அறிவிக்கப்படாத நிலையில்
1 ஆம் தேதி படத்தின் தலைப்போடு மகிழ் திருமேனி தான் இயக்குனர் என்றும் படக்குழு அறிவிப்பை வெளியிட போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனிடையில் அஜித் நேபாளத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் மே 8 ஆம் தேதி தான்
சென்னைக்கே வருகிறாராம்.
அதன் பின் தான் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பே துவங்க இருக்கிறதாம். இதனிடையில் இன்று அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மறைவிற்குக் கூட அஜித் வர முடியவில்லை. நேபாளத்தில் இருந்து வந்த பிறகு அவரின் குடும்பத்தை சந்திப்பார் என்றும் சொல்லப்படுகிறது. பிப்ரவரியில் ஆரம்பிக்கப்பட வேண்டிய ஜூன் மாதத்தில் தான் துவங்க இருக்கிறது என்ற செய்தியை கேட்டு ரசிகர்களின் உற்சாகமும் குறைந்திருக்கிறது.
இதையும் படிங்க : எல்லாத்துக்கும் காரணம் அந்த நாற்காலிதானா?.. பாசம் இல்லையா?.. விஜய் அவரது தாயை சந்தித்தன் பின்னனி!..
Idli kadai:…
Vijay: கரூரில்…
Idli kadai:…
Rajinikanth: தமிழ்…
Soori: கோலிவுட்டில்…