AK64: யாரும் சம்பளம் கொடுக்கல!.. அப்ப நானே புரட்யூசர்!. ரிஸ்க் எடுக்கும் அஜித்!...

 
ak64

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் அவரின் புதிய பட அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. குட் பேட் அக்லி ஹிட் அடித்தவுடன் அஜித்தின் அடுத்த படத்தையும் அதாவது அஜித்தின் 64வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறார் என சொல்லப்பட்டது. ஆதிக்கும் அதை உறுதி செய்தார்.

ஒருபக்கம் அஜித் கார் ரேஸ்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். ஆனால் அந்த படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. ஏனெனில் அஜித் 185 கோடி சம்பளம் கேட்டார். அஜித்தின் படத்திற்கு 200 கோடி வியாபாரம்தான் இருக்கும் நிலையில், அஜித்துக்கே 185 கோடி சம்பளம் கொடுத்தால் எங்களுக்கு கட்டுப்பாடி ஆகாது என கோலிவுட்டில் உள்ள எல்லா முக்கிய தயாரிப்பாளர்களும் கைவிரித்து விட்டனர். ஆனால் அஜித் அதிலேயே நின்றார். எனவே மும்பையெல்லாம் சென்று தயாரிப்பாளர்களை தேடினார்கள். சில தயாரிப்பாளர்களை கூட்டி வந்தார்கள். ஆனால் அவர்களை அஜித்துக்கு பிடிக்கவில்லை.. அதன்பின் அஜித் தனது சம்பளத்தை 160 கோடியாக குறைத்ததாக சொல்லப்பட்டது. ஆனாலும் படம் டேக் ஆப் ஆகவில்லை.

எனவே இந்த படம் கிட்டத்தட்ட ட்ராப் என பலரும் சொன்னார்கள். இந்த படத்தை இனிமேல் நம்புவது வேஸ்ட் என்கிற முடிவுக்கு வந்த ஆதிக் தெலுங்கு நடிகர் பாலையாவிடம் ஒரு கதையை சொல்லி ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டதாகவெல்லாம் செய்திகள் வெளியானது.

இந்நிலையில்தான் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. இந்த படத்தை அஜித்தே சொந்தமாக தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் இது தொடர்பான அப்டேட் நாளை வெளியாகவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது அஜித் ரசிகளை சந்தோஷப்படுத்தியிருக்கிறது. அஜித் இதுவரை சொந்தமாக படம் தயாரித்தது இல்லை.. அப்படி இருக்கும்போது அவரே எப்படி தயாரிப்பாளராக மாறுவார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஒருவேளை அவர்தான் தயாரிப்பாளரா இல்லை வேறு ஒருவர் தயாரிக்கிறாரா என்பது நாளை தெரிந்து விடும்..

Tags

From Around the web