அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் அவரது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த திரைப்பட ஷூட்டிங் விடுமுறையில் அஜித்குமார் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது.
இந்நிலையில் அண்மையில் விக்னேஷ் சிவன் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது விக்னேஷ் சிவனிடம் அஜித்தின் 62வது திரைப்படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. உடனே ஏதேனும் அப்டேட் அவர் கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
இதையும் படியுங்களேன் – தளபதி67 இயக்குனர் லோகேஷ் இல்லையா.?! உள்ளே புகுந்து ஆட்டத்தை கலைத்த புதிய இயக்குனர்..?
ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றமாக்கி எந்தவித அப்டேட் ஏதும் கொடுக்காமல் அஜித்தின் 62வது திரைப்படத்தை நான் இயக்குகிறேன் அதுவே பெரிய அப்டேட் தான் அந்த படத்தை பற்றி மேற்கொண்டு சொல்வதற்கு தற்போது ஒன்றுமில்லை. அது காலப்போக்கில் வரும் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
அஜித்தின் 62வது திரைப்படத்தின், கதை களம், அஜித்தின் கதாபாத்திரம் என ஏதேனும் ஒரு அப்டேட் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அதனை செய்யாமல் இயக்குனர் விக்னேஷ் சிவன் ரசிகர்களை அப்செட் ஆக்கிவிட்டார்.
Vijay TVK:…
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…